’தளபதி 65’ ஷங்கரா.. ஏ.ஆர். முருகதாஸா? விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநர் இவர்தானா?

சென்னை: இந்தியன் 2 படத்திற்கு பிறகு இயக்குநர் ஷங்கர் விஜய்யின் 'தளபதி 65' படத்தை இயக்குவார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

விஜய்யின் 64வது படமான மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

வரும் கோடை விடுமுறைக்கு மாஸ்டர் வெளியாகவுள்ள நிலையில், தளபதி 65 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 தான் தளபதி 65 படமாக இருக்க வேண்டும் என ஒருபக்கம் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ்

தலைவர் 168 படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தளபதி 65 என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஷங்கரா? முருகதாஸா?

சன் பிக்சர்ஸ் பேனரில் தான் தளபதி 65 உருவாகும் என பல ரசிகர்களும் ஆணித்தனமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இயக்குநர் விஷயத்தில் தான் ஷங்கர் என்றும் ஏ.ஆர். முருகதாஸ் என்றும் இரு வேறு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

துப்பாக்கி 2

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி 2 படம் வெளியாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தர்பார் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து படம் பண்ண ஏ.ஆர். முருகதாஸும் ரெடியாக உள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் தனது ட்விட்டர் பக்கத்தில் துப்பாக்கி 2வுக்கு வெயிட்டிங் என கமெண்ட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பனுக்கு அப்பன் டா

தளபதி 65 படத்தில் விஜய்யின் சம்பளம் ரஜினிகாந்தின் சம்பளத்திற்கு ஈடாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பதிவிட்டு வரும் தளபதி ரசிகர்கள், அப்பனுக்கு அப்பன் டா என கெத்து காட்டி வருகின்றனர்.

ஷங்கர் தான்

இந்தியன் 2 படத்திற்கு இயக்குநர் ஷங்கர் தான் தளபதி 65 படத்தை இயக்கவுள்ளார் என்று ஒரு க்ரூப் ரசிகர்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் இந்த கூட்டணி இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடைசியில இதுதான் நடக்கும்

தளபதி 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார், ஷங்கர் இயக்குவார், மீண்டும் அட்லியே இயக்குவார் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கடைசியாக ஷாக்கிங் நியூசாக பேரரசு இயக்குகிறார் என்ற செய்தி தான் வரும் என்று இந்த ரசிகர் கலாய்த்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு பிறகு

இந்திய நடிகர்களில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் கரிஷ்மா நடிகர் விஜய்க்குத் தான் இருக்கிறது என நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சமீபத்தில் பேசிய வீடியோ க்ளிப்களையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ஹீரோயின் அனுபமாவா?

தளபதி 65 படத்தின் இயக்குநர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஹீரோயின் அனுபமாவாக இருந்தால் சூப்பர் என இந்த அனுபமா ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

முதல்வன் 2

விஜய்யின் பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதால், சூப்பர்ஸ்டாருக்கு அடுத்து வசூல் சக்கரவர்த்தியாக திகழும் விஜய்யை வைத்துத் தான் இயக்குநர் ஷங்கர் படம் இயக்கவுள்ளார் என்றும், அந்த படம் முதல்வன் 2வாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் தளபதி 65 குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வரவிருக்கிறதாம். ஐ எம் வெயிட்டிங்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X