Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
கமலின் இந்தியன் 2 பட ஷூட்டிங்… மொத்தமே 120 நாட்கள் தான்: அதிரடி காட்டிய இயக்குநர் ஷங்கர்
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் சில மாதங்களாக கிடப்பில் இருந்தது.
Recommended Video
கமல் நடிப்பில் வெளியான விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படமும் மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகியுள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து இயக்குநர் ஷங்கர் முக்கியமான முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியன் 2 கதையை கேட்டப்ப புல்லரிச்சுது.. இந்தப் படம் மாஸ் ஹிட்தான் -ரவிவர்மன் சொன்னத பாருங்க!
பாதியில் நின்ற இந்தியன் 2
கமல் - இயக்குநர் ஷங்கர் காம்போவில் 1996ல் வெளியான இந்தியன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் 2ம் பாகம் இரு வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. கமல் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தை தயாரிப்பதாக முடிவானது. அதன்படி தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட, 3 உதவி இயக்குநர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஷங்கர் - லைகா இடையே பட்ஜெட் பிரச்சினை ஏற்பட, இந்தியன் 2 ஷூட்டிங் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்
இதனையடுத்து இயக்குநர் ஷங்கர் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரணின் 15வது படத்தை இயக்க கமிட் ஆனார். அதன்படி தில் ராஜூ தயாரிப்பில் ‘RC 15' படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக தொடங்கியது. ராம் சரணுடன் கியாரா அத்வானி உள்ளிட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதனிடையே, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பில் லைகாவுடன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனமும் இணைந்தது. இதனையடுத்து ‘இந்தியன் 2' படத்திற்கு மீண்டும் பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கியது.
ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்
இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியானதால், ராம் சரணின் படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. உடனடியாக இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்த ஷங்கர், கமலின் ‘இந்தியன் 2', ராம் சரணின் ‘RC 15' இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் நடைபெறும் என தெரிவித்தார். அதாவது இந்தியன் 2 ஷூட்டிங் மாதம் 15 நாட்களும், ‘RC 15' படப்பிடிப்பு மாதத்தில் 10 நாட்களும் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதில், ‘RC 15' ஷூட்டிங் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
வசந்தபாலன் இயக்கவில்லை
இதனிடையே இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்காத சில பகுதிகளை ஷங்கரின் முன்னாள் உதவியாளர் வசந்தபாலன் இயக்குவதாக சொல்லப்பட்டது. ஆனால், அது வதந்தி என்றும், இந்தியன் 2 ஷூட்டிங்கை மொத்தம் 120 நாட்களில் முடித்துவிட திட்டமிட்டுள்ளதோடு, ஷங்கரே அதை முழுவதுமாக இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தாண்டு முதல் பாதிக்குள் இந்தியன் 2 பட ஷூட்டிங்கை முடித்து, இரண்டாம் பாதியில் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விரைவில் சென்னை எழிலகம் கட்டத்தில் நடக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்கில், பாபிசிம்ஹா, காஜல் அகர்வால் இருவரும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.