இந்தியன் பட ஹீரோயின் மாற்றம்... இயக்குநர் ஷங்கர் அதிரடி முடிவு!
சென்னை : உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமான நிலையில் தற்போது அவரை மாற்ற ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
புதிய நாயகி குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 படம்
உலக நாயகன் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தியன் 2 படம் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் சூட்டிங் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங்கை மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பு
படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் தடைபட்ட காரணத்தால் லைகா நிறுவனம் மற்றும் ஷங்கர் இடையில் மோதல் உருவானது.

ராம்சரணை இயக்கும் ஷங்கர்
இதையடுத்து தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் ஷங்கர். இதனிடையே இந்தியன் 2 படத்தை முடிக்காமல் அடுத்த படத்தை ஷங்கர் இயக்கக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடியது லைகா நிறுவனம். ஆனால் அவ்வாறு அவருக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

மீண்டும் இந்தியன் 2 சூட்டிங்
இதையடுத்து ராம்சரண் படத்தின் சூட்டிங்கை துவங்கினார் ஷங்கர். இந்நிலையில் லைகா நிறுவனர் சுபாஷ்கரனுடன் சமீபத்தில் பேசிய ஷங்கர், மீண்டும் இந்தியன் 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். ராம்சரண் படத்தை முடித்துவிட்டு இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார் அவர்.

காஜல் அகர்வால் மாற்றம்
அதற்குள் கமலும் விக்ரம் படத்தில் நடித்து முடித்துவிடுவார் என்பதால் இந்தியன் 2 படப்பிடிப்பு தடையின்றி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் விவேக் மற்றும் காஜல் அகர்வாலை மாற்ற ஷங்கர் திட்டமிட்டுள்ளார். விவேக் மறைவையொட்டி அவருடைய கேரக்டரில் யார் ஒப்பந்தமாவார்கள் என்பது குறித்து திட்டமிடப்பட உள்ளது.

த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை
இதேபோல காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் அவரையும் படத்திலிருந்து நீக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். அவருக்கு பதிலாக நடிகை த்ரிஷா ஒப்பந்தமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











