இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து.. விஜய்க்கு ஷங்கர் சபாஷ்!
சென்னை: முதல்வன் படத்தை விஜய் மிஸ் பண்ணியிருந்தாலும் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றி விழாவில் கூட ஷங்கர் ஸ்டைலில் செம மாஸான படத்தில் நடிக்க வேண்டும் என பேசியிருந்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், "இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து" விஜய் சாதித்துள்ளார் என சற்றுமுன் இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

அவரது பாராட்டுக்கு கீழ் ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள், நீங்க நினைச்ச மாதிரி நல்லாட்சியை விஜய் நிஜத்தில் கொடுப்பார் என்றும் முதல்வன், சிவாஜி படமெல்லாம் ரியல் லைஃப்பில் நடந்து வருகிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
முதலமைச்சரான விஜய்: ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் ஒரு சாதாரண டிவி தொகுப்பாளர் ஒரு நாள் முதலமைச்சராக முடியும் என்றும் அவரது ஒரு நாள் நல்லாட்சியை பார்த்த மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள் என்றும் எவ்வளவு பெரிய கட்சி எத்தனை சூழ்ச்சி செய்தாலும் சாமானிய மக்களின் மாபெரும் சக்தியான ஓட்டு அனைத்தையும் மாற்றும் என காட்டியிருப்பார். அந்த வகையில் சினிமாவில் நடிகராக இருந்து வந்த விஜய் கட்சியை தொடங்கி 3 ஆண்டுகளில் திமுக - அதிமுக என்கிற இரு பெரு இமாலய கட்சிகளை வீழ்த்தி முதலமைச்சராக மாறியுள்ளார். கேம் சேஞ்சர் படத்திலும் ஐஏஎஸ் அதிகாரி முதல்வராக எப்படி மாறுகிறார் என்பதை ஷங்கர் படமாக்கி இருப்பார்.
சிஎம் விஜய்க்கு ஷங்கர் பாராட்டு: முதல்வன் படத்தில் அர்ஜுன் வேட்டி, சட்டை எல்லாம் அணியாமல் அந்த காலத்திலேயே கோட் சூட் அணிந்துக் கொண்டு முதலமைச்சராக கெத்துக் காட்டுவார். அதே போலவே தற்போது விஜய் கோட் சூட் அணிந்து வருகிறார் என ஏகப்பட்ட ரீல்ஸ் வைரலாகி வரும் நிலையில், ஒரிஜினல் ஓனரான ஷங்கர் தற்போது சிஎம் விஜய்யை பாராட்டியுள்ளார்.
சினிமாவில் மட்டுமே சாத்தியம்: "இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு
@CMOTamilnadu
@TVKVijayHQ
அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
The people's wish has come true, and you're off with a banger start. Onwards and upwards brother" என இயக்குநர் ஷங்கர் முதலமைச்சர் விஜய்யை மனதார பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications