இப்படியொரு அழகான படத்தை சமீபத்தில் பார்க்கல.. தனுஷ், நித்யா மேனன் சூப்பர்.. ஷங்கர் பாராட்டு!

சென்னை: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை இயக்குநர் ஷங்கர் வெகுவாக பாராட்டி உள்ளார்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி கிளப்பில் இணைந்து சன் பிக்சர்ஸ்க்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

நடிகர் தனுஷ், நித்யா மேனன் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசையை இயக்குநர் ஷங்கர் வெகுவாக பாராட்டி உள்ளார்.

திருச்சிற்றம்பலம் கதை

திருச்சிற்றம்பலம் கதை

சாதாரண அமைதி பயந்தாங்கொள்ளி உணவு டெலிவரி பாயான தனுஷ் இரண்டு பெண்களை காதலிப்பதும் அந்த காதல் தோல்வியில் முடிவதும், கடைசியில் கூடவே இருக்கும் தனது தோழி நித்யா மேனனின் காதலை புரிந்து கொண்டு அவரை காதலித்து கரம் பற்றுவது என்கிற சாதாரண கதையை ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட போர் அடிக்க விடாமல் கொடுத்து இயக்குநர் மித்ரன் ஆர் ஜஹவர் வெற்றிக்கனியை பறித்து விட்டார்.

100 கோடி வசூல்

100 கோடி வசூல்

கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் 12 நாட்களிலேயே 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அந்த கிளப்பில் இணைந்து விட்டது. இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், டான், விக்ரம் படங்களைத் தொடர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்த படம் தனுஷின் திருச்சிற்றம்பலம்.

ஷங்கர் பாராட்டு

ஷங்கர் பாராட்டு

இந்நிலையில், சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை Beautiful Movie என பாராட்டி உள்ளார். மித்ரன் ஜவஹரின் உணர்ச்சி பூர்வமான எழுத்துக்கள், நித்யா மேனனின் சிறந்த நடிப்பு, தனுஷ் மற்றும் அனிருத்தின் காம்போ, பாரதிராஜாவின் அசத்தல் நடிப்பு மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பு என அத்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளது என பாராட்டி உள்ளார்.

தனுஷ் நன்றி

தனுஷ் நன்றி

திருச்சிற்றம்பலம் படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டிய நிலையில், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் தனுஷ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ரொம்ப நன்றி சார், இது எனக்கும் என் டீமுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது என நடிகர் தனுஷ் நன்றி கூறியுள்ளார்.

மகள் படத்தை பாராட்டல

மகள் படத்தை பாராட்டல

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வெளியான கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டவில்லை என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். சார் அதிதி ஷங்கர் கோவிச்சிக்கப் போறாங்க என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X