டிராகன் இயக்குநருக்கு Hats Off.. கண்கள் கலங்கிவிட்டன.. புகழ்ந்து தள்ளிய ஷங்கர்

சென்னை: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் டிராகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. வசூலிலும் அடித்து நொறுக்கிவருகிறது. படத்தில் அத்தனை காட்சிகளும் போர் அடிக்காமல் செல்வதாக ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறிவருகிறார்கள். பல தியேட்டர்களில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தூக்கிவிட்டு டிராகன் படத்தை திரையிட ஆரம்பித்திருக்கும் சூழலில் இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருக்கிறார்.

கோமாளி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்தப் படத்துக்கு பிறகு தானே ஹீரோவாக நடித்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. அப்படம் மெகா ப்ளாக் பஸ்டராகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. ஒரு புதுமுக ஹீரோ நடித்து சின்ன பட்ஜெட்டில் தயாரான படம் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்தப் படத்திலிருந்து பிரதீப் 2கே கிட்ஸ்களின் நாயகனாகவும், குட்டி தனுஷாகவும் மாறினார்.

Dragon Pradeep Ranganathan Ashwath Marimuthu

டிராகன் பிரதீப்: சூழல் இப்படி இருக்க லவ் டுடே படத்துக்கு பிறகு தனது காலேஜ் சீனியரும்; ஓ மை கடவுளே படத்தின் இயக்குநருமான அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் கமிட்டானார். இதில் அவருடன் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கௌதம் மேனன், ஜார்ஜ் மரியன், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து, ஹர்ஷத் கான் என பலர் நடித்திருந்தார்கள். ஏஜிஎஸ் நிறுவனம்தான் 37 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டான் 2: படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றாலும் இது டான் படத்தின் இரண்டாவது பாகம் போன்று இருப்பதாக கமெண்ட்ஸ்கள் பறந்தன. ஆனால் அதனை அஷ்வத் மாரிமுத்து ரொம்பவே நம்பிக்கையோடு மறுத்தார். இப்போது டான் 2 என்று சொல்பவர்கள் எல்லாம் படத்தை பார்த்து முடித்த பிறகு அந்தப் படம் வேறு இந்தப் படம் வேறு என்று சொல்வார்கள் என கான்ஃபிடென்ஸோடு தெரிவித்தார். இப்படிப்பட்ட நிலையில் கடந்த 21ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது.

மாஸ் ரெஸ்பான்ஸ்: படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறார்கள். ஒவ்வொரு சீனையும் அஷ்வத் மாரிமுத்து செதுக்கியிருக்கிறார் என்றும்; பிரதீப் ரங்கநாதன் அட்டகாசமாக நடித்திருக்கிறார் என்றும் கூறி தங்களது பெரிய ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சொல்லப்பட்டிருக்கும் மெசேஜ் தற்காலத்துக்கு ரொம்பவே அவசியமானதாகவே கருதப்படுகிறது. இப்படி படத்துக்கு சூப்பர் விமர்சனங்கள் வருவதால் தியேட்டர்கள் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன. வசூலிலும் படம் மரண மாஸ் காண்பித்து வருகிறது.

ஷங்கர் பாராட்டு: ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் படத்தை பாராட்டிவருகின்றார்கள். அந்தவகையில் இயக்குநர் ஷங்கர் டிராகன் படம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "டிராகன் ஒரு அழகான படம். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு ஒரு Hats Off. அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். தான் ஒரு அற்புதமான Entertainer என்பதை பிரதீப் ரங்கநாதன் மீண்டும் நமக்கு நிரூபித்திருக்கிறார். மிஷ்கின், அனுபமா, ஜார்ஜ் மரியான் ஆகியோரின் பெர்ஃபார்மன்ஸும் நமது இதயத்தில் நிற்கின்றன.

படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. தற்போது அதிக ஏமாற்றுக்காரர்கள் அதிகரித்துவரும் இந்த உலகத்துக்கு தேவையான செய்தியை படக்குழு சொல்லியிருக்கிறது. படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்ந்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X