எழுத்து மற்றும் இயக்கம் பிரிலியன்ட்... மாநாடு படத்தை பாராட்டி தள்ளிய பிரம்மாண்ட இயக்குநர்!

சென்னை: பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் மாநாடு படத்தை பாராட்டி தள்ளியுள்ளார்.

சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான படம் மாநாடு. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் எஸ்ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கள் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் மாநாடு படத்தை பாராட்டி வருகின்றனர்.

ரஜினிகாந்த் பாராட்டு

ரஜினிகாந்த் பாராட்டு

நடிகர் ரஜினிகாந்த் மாநாடு படத்தை பார்த்து விட்டு இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் சிம்பு, எஸ்ஜே சூர்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என மொத்த படக்குழுவையும் பாராட்டி தள்ளியிருந்தார். அவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் மாநாடு படத்தின் படக்குழுவை பாராட்டியிருந்தனர்.

பிரிலியன்ட் எழுத்து- இயக்கம்

பிரிலியன்ட் எழுத்து- இயக்கம்

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கர் மாநாடு படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், வெங்கட் பிரபு மாநாடு படத்தை பிரிலியன்ட்டாக எழுதி இயக்கியுள்ளார். சிலம்பரசன் கலக்கியுள்ளார். எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அற்புதமாக உள்ளது.

நல்ல பொழுதுபோக்கு

நல்ல பொழுதுபோக்கு

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை உயர்த்தியுள்ளது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ட கலைஞர்களும் அவர்களின் பெஸ்ட்டை கொடுத்துள்ளனர்.
டைம் லூப் கதை அற்புதமாக வேலை செய்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு நல்ல பொழுது போக்கு நல்ல எண்டெர்டெய்ன்மென்ட்.. இவ்வாறு இயக்குநர் ஷங்கர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு நன்றி

நடிகர் சிம்பு நன்றி

இயக்குநர் ஷங்கரின் இந்த பதிவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகர் சிம்புவும் இயக்குநர் ஷங்கரின் இந்த பதிவுக்கு டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X