வாழை இனி முன்னைப்போல் தித்திக்குமா? மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!

சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது படமான வாழை வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் பாராட்டை வெகுவாக பாராட்டி உள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை. படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகி மக்கள் மனதில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மணிரத்னம் ,பாலா, மிஷ்கின், பாரதி ராஜா, தனுஷ், விஜய்சேதுபதி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி தள்ளி எழுந்தனர்.

vaazhai Mari selvaraj shankar

மாரிசெல்வராஜின் வாழை: படத்தை பார்த்த பல திரை நட்சத்திரங்கள் படத்தை வியந்து தங்களின் கருத்தை வெளியிட்ட காரணத்தால் படம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இதனால், தியேட்டருக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். இப்படத்தின் ஒரு நாள் வசூல் 1.15 கோடியாக இருந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று 2.15 கோடியை வசூலித்தது. இதைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு பிரபலத்திடம் இருந்து தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வருவதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அழகியல் உணர்வுகள்: இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். அதில், "இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்களை சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்றும் தெரியவில்லை. ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல், உணர்வுகள் என எல்லாமே சிறப்பாக உள்ளது. மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என ஷங்கர் வீடியோவில் பேசி உள்ளார்.

அற்புதமான படைப்பு: முன்னதாக இப்படம் பார்த்த விஜய்சேதுபதி, இதுபோன்ற செய்திகளை செய்திகளில் கேட்கும் போதும், செய்தி தாள்களில் பார்க்கும் போதும் சாதாரணமாக கடந்து போய் இருப்போம். இதற்கு பின்னாடி இருக்கும் வாழ்க்கையை, இவ்வளவு அழுத்தம் திருத்தமாக புதிய வைத்து இருக்கும் மாரி செல்வராஜுக்கு நன்றி, விஜய் சேதுபதி, தழு தழுத்த குரலில் படம் குறித்து பிரம்மித்து பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X