ப்பா.. அந்த 2 அறிவிப்பும் வேற லெவல்.. முதல்வர் ஸ்டாலினால் நெகிழ்ந்த இயக்குநர் ஷங்கர்!

சென்னை: முதல்வராக பதவியேற்ற கையோடு ஸ்டாலின் அறிவித்த 5 அறிவிப்புகளில் 2 அறிவிப்புகள் வேற லெவல் என பாராட்டி தள்ளியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றார்.

அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினுடன் அவரது அமைச்சரவையும் நேற்று பதவியேற்று கொண்டது.

ஸ்டாலின் கையெழுத்து

ஸ்டாலின் கையெழுத்து

தமிழக முதல்வராக முதல்முறையாக பதவியேற்ற முக ஸ்டாலின் நேற்று 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு 4000 ரூபாய், ஆவின் பால் கட்டணம் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வது உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஸ்டாலினுக்கு புகழாரம்

ஸ்டாலினுக்கு புகழாரம்

முதல் நாளிலேயே ஸ்டாலின் கையெழுத்திட்ட இந்த திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த அறிவிப்புகளை பாராட்டி சமூக வலைதளங்களில் ஸ்டாலினை நேற்று முதலே மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

சினிமா பிரபலங்களும் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஷங்கர், ஸ்டாலினின் இந்த அறிவிப்புகளை பாராட்டி டிவிட்டியுள்ளார்.

Recommended Video

Suriya Wishing Chief Minister Stalin | Stalin பதவி பிரமாணம் #TnCMStalin
பெண்களுக்கு இலவசம்

பெண்களுக்கு இலவசம்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, நம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு தமிழக மருத்துவ காப்பீட்டுத் தொகை மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஆகிய அரசாணைகளை நான் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X