Game Changer Teaser: கேம் சேஞ்சர் டீசர்லயே ஆட்டத்தையே மாற்றிய ஷங்கர்.. புகுந்து விளையாடும் ராம் சரண்

சென்னை: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராம் சரண். இவர் இதற்கு முன்னர் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் மற்றும் பிரமாண்டமான இயக்குநரான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். தற்போது பிரமாண்டமான இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். படத்தினை ஷங்கர் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

ஏற்கனவே கூறியதைப்போல் கேம் சேஞ்சரின் கதையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் இயக்குநர் ஷங்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசுகையில், தான் ஏற்கனவே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மற்றும், வேல்பாரி ஆகிய படங்களில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றேன். இப்படியான நிலையில், பெரிய பெரிய தயாரிப்பாளர்களும், கதாநாகர்களும் அணுகுகின்றார்கள். அவற்றை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. இப்படியான நிலையில் வாட்ஸ் ஆப் குரூப்பில் கார்த்திக் சுப்புராஜ் இப்படியான கதை உள்ளதாகக் கூறினார். அதன் பின்னர் கமிட் ஆன படம்தான் கேம் சேஞ்சர் எனக் கூறினார்.

shankar ram charan game changer

படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் ராம் சரண் பல கெட்டப்புகளில் காட்சி அளிக்கின்றார். இதனால் படத்தில் ராம் சரண் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற கேள்வி எழுகின்றது. அதேபோல் இரண்டு கெட்டப்களில் வரும் எஸ்.ஜே சூர்யா வருகின்றார். படத்தின் டீசரை வைத்துப் பார்க்கும்போது, படம் தேர்தல் அரசியலை மைய்யப்படுத்திய கதையாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

டீசர்: தற்போது கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் மொத்தம் ஒரு நிமிடம் 31 நொடிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் ராம் சரண் ஆறு கெட்டப்களில் தோன்றுகின்றார். மேலும், படத்தில் விஜய் படத்தின் ஃப்ரேம்கள் இடம் பெற்றுள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் எஸ்.ஜே சூர்யாவைப் பொறுத்தவரையில் இரண்டு கெட்டப்களில் தோன்றுகின்றார். இரண்டு கெட்டப்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

shankar ram charan game changer

பிரம்மாண்டம் : ஷங்கர் என்றாலே, பிரம்மாண்டம் தான் என அனைவருக்கும் தோன்றும். அப்படி இருக்கையில் இந்தப் படத்தின் டீசரில், பாடல் காட்சிகளில் மட்டும் ஷங்கர் தனது பிரம்மாண்டத்தைக் காட்டியுள்ளார். மேலும் படத்தின் கதை, ஷங்கரின் முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களின் சாயல் இந்தப் படத்திலும் இருக்குமா என ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

தோல்வி: இதற்கு முன்னர் ஷங்கர் தனது இந்தியன் 2 படத்தின் பெரும் தோல்விக்குப் பின்னர் கேம் சேஞ்சர் படத்தினை கையில் வைத்து பொங்கலுக்கு வருகின்றார். இதனால் கேம் சேஞ்சர் படத்தின் மீது ஷங்கரின் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியானால், படம் எப்படி இருக்கும் என்பது ஓரளவுக்குத் தெரியவரும் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X