ராம் சரண் ட்வீட்... உற்சாகமா பதில் ட்வீட் போட்ட இயக்குநர் ஷங்கர்... மிகச்சிறப்பு
சென்னை: இந்தியன் 2 பட வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் அடுத்ததாக ராம்சரணை வைத்து ஆர்சி15 படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்த படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷங்கர் இல்லத்தில் ராம்சரண், தில் ராஜூ உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து ராம்சரண் ட்வீட் செய்திருந்த நிலையில், தற்போது ஷங்கர் உற்சாகத்துடன் பதிலுக்கு ட்வீட் செய்துள்ளார்.

ஷங்கருக்கு சாதகமான தீர்ப்பு
இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு இயக்குநர் ஷங்கர் அடுத்த படங்களில் கமிட் ஆக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஷங்கருக்கு அப்படி உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

ஷங்கர் இயக்கம்
இதையடுத்து தனது அடுத்தகட்ட பணிகளில் தற்போது ஷங்கர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ராம் சரணின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். தில்ராஜூ படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படம் குறித்து இரு தினங்களுக்கு முன்பு ஷங்கர் இல்லத்தில் மூவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

ராம் சரண் பாராட்டு
இதையடுத்து ராம்சரண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த சந்திப்பின்போது தனக்கு அளித்த விருந்தோம்பல் குறித்து ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஷங்கர் மகிழ்ச்சிப் பதிவு
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளார். இத்தகைய விருந்தோம்பலை அளித்தது தங்களுக்கும் மகிழ்ச்சி அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் அவரது 50வது படம். இதையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











