சிவகார்த்திகேயனின் 'ரெமோ' பர்ஸ்ட் லுக் & சிங்கிள் டிராக்கை வெளியிடும் ஷங்கர்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் டிராக்கை, இயக்குநர் ஷங்கர் நாளை வெளியிடுகிறார்.
ரஜினிமுருகன் படத்துக்குப் பின் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ரெமோ. 45 கோடிகளுக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சொந்தமாகத் தயாரித்து வருகிறது.

ரசூல் பூக்குட்டி, பி.சி.ஸ்ரீராம் என முன்னணி சினிமாக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில், பெண் உட்பட 3 வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஷங்கர் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.
விக்ரம் பல்வேறு தோற்றங்களில் மிரட்டிய அந்நியன் படத்தில் இடம்பெற்ற ரெமோ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்துவிட்டனர். இதனால் ரெமோவை உருவாக்கிய ஷங்கரை வைத்தே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடலை படக்குழு வெளியிடுகிறது.
ரெமோ பர்ஸ்ட் லுக் டீசரை சைமா விருது விழாவில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஷங்கர் தற்போது 2.ஓ படப்பிடிப்பில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











