பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அந்நியன்.. அந்த நடிகரை வைத்து இயக்கப் போகிறாராம் ஷங்கர்?

சென்னை: இயக்குநர் ஷங்கர் அந்நியன் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். ஷங்கர் கமலை வைத்து இந்தியன் படத்தின் சீக்குவலான இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தியன் 2

இந்தியன் 2

அதனை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. சில ரிலாக்ஸேஷன்கள் அறிவிக்கப்பட்ட போதும், இந்தியன் 2 படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை.

இந்தியில் ரீமேக்

இந்தியில் ரீமேக்

இந்தப் படத்தில் பணியாற்றிய பெரும்பாலான டெக்னிஷியன்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பதால், கொரோனா அச்சுறுத்தலால் அவர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் - ஷங்கர் கூட்டணி

விக்ரம் - ஷங்கர் கூட்டணி

2005ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் அந்நியன். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் ஆகிய கேரக்டர்களில் நடித்திருந்தார்.

ரன்வீர் சிங் லீடிங்

ரன்வீர் சிங் லீடிங்

அவருக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும் விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். இதில் ரன்வீர் சிங் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X