ரசிகர்களை சென்றடையும் முன்பே அவர் பாட்டு ஹிட்டாகும்.. எஸ்.பி.பி., குறித்து ஷங்கர் நெகிழ்ச்சி!

சென்னை: ரசிகர்களை சென்றடையும் முன்பே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்கள் ஹிட்டாகும் என இயக்குநர் ஷங்கர் ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு போட்டுள்ளார்.

ஆயிரம் நிலவே வா தொடங்கி இன்னும் ரிலீசாகாத அண்ணாத்த வரைக்கும் பாடி இருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமான செய்தி உலக இசை ரசிகர்களை உலுக்கி எடுத்து வருகிறது.

காதலன் பட நினைவுகளை பகிர்ந்து இயக்குநர் ஷங்கர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

காதலன் அனுபவம்

காதலன் அனுபவம்

இளம் இயக்குநராக காதலன் படத்தை இயக்கிய ஷங்கருக்கு ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம் போன்ற ஜாம்பவான்களுடன் பயணம் செய்யும் அருமையான தருணங்கள் அமைந்தது. காதலன் படத்தில் ஹீரோ பிரபுதேவாவின் தந்தையாக எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை நடிக்க வைத்திருப்பார் ஷங்கர்.

ஷங்கர் உருக்கம்

ஷங்கர் உருக்கம்

ஒட்டுமொத்த இந்திய திரை பிரபலங்களும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் காதலன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அருகே அமர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹிட்டாகும்

ஹிட்டாகும்

ஒரு சில பாடகர்களுக்கு மட்டுமே அந்த சிறப்புத் தன்மை உள்ளது. ரசிகர்களை சென்றடைவதற்கு முன்பே ரெக்கார்டிங் தியேட்டரிலேயே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாட்டு ஹிட் ஆகிவிடும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காதலன் படம் தொடங்கி 2.0 வரைக்கும் ஏகப்பட்ட ஷங்கர் படங்களில் எஸ்.பி.பி பாடி உள்ளார்.

காற்றில் கலந்திருப்பார்

காற்றில் கலந்திருப்பார்

மேலும், நாம் அவரது உடலை மட்டுமே இழக்கிறோமே தவிர அவரது குரலை ஒரு போதும் இழக்கப் போவது இல்லை. அது என்றுமே இசையாய் காற்றில் கலந்து நம்முடனே காலம் முழுவதும் உறவாடும் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

புதிய மனிதா

புதிய மனிதா

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். ரஜினிகாந்தின் ஓப்பனிங் பாடல்களுக்கு தொடர்ந்து பாடி வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் "புதிய மனிதா பூமிக்கு வா" பாடலில் ரோபோ ரஜினிக்கு பாடி இருந்தார். அதற்காக வித்தியாசமான முறையில் அவரது குரலை ஏ.ஆர். ரஹ்மான் படாத பாடு படுத்தி எடுத்தார் என அந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஷங்கர் பேட்டி கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X