இந்தியன் 2 என்னாச்சு.. இயக்குநர் ஷங்கரின் அடுத்த அதிரடி.. RC15 படப்பிடிப்பு தள போட்டோ!

சென்னை : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப்படமான RC15 படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான இந்தியன் 2 பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இதில், கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தியன்

இந்தியன்

இந்தியன் திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்தில் சுகன்யா, கஸ்தூரி, மணிஷா கொய்ராலா, செந்தில், கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படம், 27 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதன் அடுத்த பாகம் மிகப் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் 2

இந்தியன் 2

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைந்து முடிக்கப்பட்டு இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் திரையில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

ராம்சரணின் RC15

ராம்சரணின் RC15

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப்படமான RC15 படப்பிடிப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் ஆரம்பித்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரித்துள்ளார்.

பான் இந்தியப்படம்

பான் இந்தியப்படம்

ராம்சரணின் 15 திரைப்படமான இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருப்பதாகவும், நடுத்தர வயது முதல் வயதானவர் என இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ராம் சரணின் காதலியாக கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த், சுனில், நவீன் சந்திரா, சாமுத்திரிக்கனி ஆகியோர் நடித்துவருகின்றனர். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப்பிறகு தெலுங்கு நடிகர்களின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளதால், இப்படமும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X