Director Shankar: இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லை.. உண்மையை வெளிப்படுத்திய ஷங்கர்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இருவேறு பாகங்களாக ஆறு மாத இடைவெளிகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என்று ரிலீசாகவுள்ள சூழலில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் குறித்து இயக்குனர் சங்கர் நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இந்தப் படத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பான காஸ்டியூமுடன் காஜல் அகர்வால் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படம்: கமல்ஹாசன் லீட் கேரக்டரில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் முன்னதாக ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட சூழலில் சில காட்சிகளின் சூட்டிங் பெண்டிங் இருந்ததாகவும் அதையொட்டி இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. பிரபல இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், நடிகர் சிம்பு உள்ளிட்டவர்கள் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தனர்.
நடிகை காஜல் அகர்வால்: மேலும் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பட குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பான பகிர்வுகளை கொடுத்தனர். இந்நிலையில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் குறித்து அடுத்தடுத்த சுவாரசியங்களை இயக்குனர் ஷங்கர் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அந்த வகையில் அவர் படத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால். குறித்து புதிய தகவல்களை தெரிவித்து இருந்தார். இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியான சூழலில் அவை எவற்றிலுமே காஜல் அகர்வால் காணப்படவில்லை.
உண்மையை வெளிப்படுத்திய ஷங்கர்: இதையடுத்து அவரது கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஷங்கர் அதற்கான உண்மை காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். காஜல் அகர்வால் இந்தியன் 3 படத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் தான் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்த பிளாஷ்பேக் காட்சிகளில் நடிகர் கமலுக்கு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக காண்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவில்லை என்ற உண்மையை தற்போது ஷங்கர் வெளிப்படுத்தியுள்ளார்.
காஜல் அகர்வால் நெகிழ்ச்சி: இதனிடையே நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய காதல அகர்வால், இந்த படத்தில் தான் இணைந்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் இணைந்து பணியாற்றியதன் மூலம் அதிகமான விஷயங்களை தான் கற்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆயினும் அவரை இந்தியன் 3 படத்தில் பார்க்க நாம் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் காஜல் அகர்வால். இவர் திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்ற சூழலிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











