ஷங்கர் பொண்ணு இப்போ டாக்டர் ஆகிட்டாங்க.. பட்டமளிப்பு விழா புகைப்படத்தை ஷேர் செய்த அதிதி ஷங்கர்!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள அதிதி ஷங்கர் தற்போது டாக்டர் ஆகி உள்ளார்.

பட்டமளிப்பு விழா புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

பிரம்மாண்ட இயக்குநர்

பிரம்மாண்ட இயக்குநர்

ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்றே பெயர் வாங்கி உள்ளார். கோலிவுட் சினிமாவின் வர்த்தகத்தை உலகளவுக்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஷங்கர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஷங்கர் மகள்

ஷங்கர் மகள்

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் ஆகி செட்டில் ஆன நிலையில், ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமா மீது ஆர்வம் செலுத்தி வருகிறார். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படம் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

விருமன் படத்தில் நடித்து வரும் அதிதி ஷங்கர் சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஈர்க்க இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது மாடலிங் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சுடிதார் மற்றும் சேலை அணிந்து செம க்யூட்டாக அவர் பதிவிட்டு வரும் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.

டாக்டர் அதிதி ஷங்கர்

டாக்டர் அதிதி ஷங்கர்

மருத்துவ படிப்பு படித்து வந்த அதிதி ஷங்கர் தனது படிப்பை முழுமையாக முடித்து பட்டம் வாங்கி உள்ளார். சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிதி ஷங்கருக்கு பட்டம் அளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

சந்தோஷத்தில் ஷங்கர்

சந்தோஷத்தில் ஷங்கர்

தனது மகள் அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை முடித்து விட்டு பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் இருப்பது அதிதி ஷங்கர் ஷேர் பண்ண குடும்ப புகைப்படத்தை பார்த்தாலே நன்றாக புரிகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து இயக்குநர் ஷங்கருக்கும் அதிதி ஷங்கருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X