ஷங்கரின் மகள் திருமணம்.. ரெசார்ட்டில் பிரம்மாண்ட மேடை.. ஸ்டாலின் பங்கேற்பு.. உச்சக்கட்ட பாதுகாப்பு!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணம் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர்.

தொடர்ந்து இந்தியன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன், 2,o என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இன்று திருமணம்

இன்று திருமணம்

இயக்குனர் ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. டாக்டரான இவருக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. கிரிக்கெட் வீரர் ரோஹித்துடன் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இன்று திருமணம் நடைபெறுகிறது.

புதுச்சேரி ரஞ்சி அணி

புதுச்சேரி ரஞ்சி அணி

தொழிலதிபர் தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்த்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

 பிரம்மாண்ட மேடை

பிரம்மாண்ட மேடை

இவர்களது திருமணத்தை மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் பிரம்மாண்ட மேடை அமைத்து நடத்துகிறார் இயக்குநர் ஷங்கர். 2.0 படத்தின் கலை இயக்குனரான முத்துராஜ் இந்த மேடை செட்டை அமைத்துள்ளார்.

முதல்வர் பங்கேற்பு?

முதல்வர் பங்கேற்பு?

தற்போதுதான் கொரோனா இரண்டாவது அலை சற்று ஓய தொடங்கியுள்ளதால் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் இந்த திருமணத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 பிரம்மாண்ட வரவேற்பு

பிரம்மாண்ட வரவேற்பு

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பலத்த பாதுகாப்புடன் திருமணம் நடைபெறுகிறது. லாக்டவுன் முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்ட பின் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: shankar ஷங்கர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X