டைரக்டர் ஷங்கர் மகளுக்கு டும்...டும்...டும்...மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ?
சென்னை : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என புகழப்படுபவர் டைரக்டர் ஷங்கர். ரஜினி, கமல், விக்ரம் என டாப் ஹீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஷங்கர். தற்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்தபடியாக ராம் சரணை வைத்து தெலுங்கு படம், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் என புதிய படம், லைகா உடனான வழக்கு ஆகியவற்றிற்கு இடையே கடந்த ஆண்டு இறுதி முதல் தனது மகளின் திருமண வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார் ஷங்கர்.

தொழிலதிபர் மகன்
தனது மூத்த மகள் அதிதி ஷங்கருக்கு, தொழிலதிபர் ஒருவரின் மகனை தான் மாப்பிள்ளையாக தேர்வு செய்துள்ளார் ஷங்கர். இவர் டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் மதுரை அணியின் உரிமையாளரும் கூட. அதிதி ஷங்கர், அமெரிக்காவில் எகனாமிக்ஸ் படித்தவர் ஆவார்.

மாப்பிள்ளை கிரிக்கெட் வீரர்
ஷங்கரின் வருங்கால மாப்பிள்ளை ரோஹித், ஒரு கிரிக்கெட் வீரரும் கூட தான். இவர் டிஎன்பிஎல் போட்டியில் புதுச்சேரி அணிக்காக விளையாடி உள்ளார். தற்போது ஷங்கர் மகளுடன் திருமணம் முடிவானதால் இவரின் ஃபோட்டோவை அந்த அணியினர் இணையத்தில் வெளியிட்டு, வைரலாக்கி உள்ளனர்.

பொள்ளாச்சியில் திருமணம்
அதிதி - ரோஹித் ஆகியோரின் திருமணம் ஜுன் 27 ம் தேதி பொள்ளாச்சியில் நடக்க உள்ளதாம். கொரோனா காலம் என்பதால் அரசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு, இரு தரப்பையும் சேர்ந்த நெருங்கிய குடும்ப உறவினர்கள் 100 பேர் மட்டும் இந்த திருமண விழாவில் பங்கேற்க உள்ளனர்.

விரைவில் வரவேற்பு
ஷங்கரின் மகள் திருமண விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் யாரும் கலந்து கொள்கிறார்களா என்ற தகவல் வெளியிடப்படவில்லை. சென்னையில் விரைவில் திருமண வரவேற்பு நடத்தப்படலாம் எனவும், இதற்கு திரையுலக பிரபலங்கள் அழைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











