பொங்கல் ரிலீசை குறிவைக்கும் ஷங்கரின் படங்கள்.. பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம்.

இந்தப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இதனிடையே ராம் சரணின் 15வது படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமலின் இந்தியன் 2 படம்

கமலின் இந்தியன் 2 படம்

நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள படம் இந்தியன் 2. இந்தப் படத்தை 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கி வருகிறார். முன்னதாக படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக சூட்டிங் நிறுத்தப்பட்டது.

சூப்பர் வெற்றியை கொடுத்த இந்தியன்

சூப்பர் வெற்றியை கொடுத்த இந்தியன்

விக்ரம் படம் கொடுத்த அதிரி புதிரி வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன், இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக வெளியான இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரு என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் கமல்ஹாசன். அந்தப் படம் சிறப்பான வெற்றியை கமல்ஹாசனுக்கு கொடுத்தது.

பனையூரில் சூட்டிங்

பனையூரில் சூட்டிங்

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் பனையூரில் இரவு நேர சூட்டிங்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் 7 வில்லன்கள் மோதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகியோர் கமலுக்கு வில்லனாகியுள்ளனர்.

ஒரே நேரத்தில் இரு படங்கள்

ஒரே நேரத்தில் இரு படங்கள்

இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடிக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே ராம்சரணின் ஆர்சி15 படத்தையும் ஷங்கர் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக சமீபத்தில் படக்குழு நியூயார்க் சென்றிருந்தது.

பொங்கலை குறிவைக்கும் ஷங்கர் படங்கள்

பொங்கலை குறிவைக்கும் ஷங்கர் படங்கள்

ஆர்சி15 படத்தை தில் ராஜு தயாரித்து வரும் சூழலில், படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய தில் ராஜு மற்றும் ராம் சரண் இருவரும் உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல இந்திய 2 படத்தை 2024 பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிசும் திட்டமிட்டுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்


இதையடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்சி 15 மற்றும் இந்தியன் 2 என இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான் என்ற வகையில் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு கண்டிப்பாக இனிப்பான செய்தியாகத்தான் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X