Director Shankar: முதல் பாகம் ஸ்காட்ச் விஸ்கி மாதிரி.. இந்தியன் 2 படம் குறித்து ஷங்கர் ஓபன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு உலக அளவில் அதிகமான பிரமோஷன்களை படக் குழுவினர் மேற்கொண்டிருந்தனர். கடந்த 1996ம் ஆண்டிலேயே பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியது இந்தியன் படம்.

இந்தியன் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டது. ஹிந்தியில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்தை காட்டியதை காண முடிந்தது. இந்நிலையில் இந்தியன் 2 படம் இன்றைய தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆயினும் பல்வேறு இடங்களிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Shankar Kamal haasan Indian 2 movie tamil cinema 2

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசனை 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 படத்திற்காக இயக்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2018ம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் தயாரிப்பு தரப்புடன் ஷங்கருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படம் கடந்த சில ஆண்டுகளாக முடங்கி இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மீண்டும் இந்த படம் தூசி தட்டப்பட்டு சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. இன்றைய தினம் படம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்திற்காக படக்குழுவினர் மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன்களில் ஈடுபட்ட நிலையில் சர்வதேச அளவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.

இந்தியன் படம்: இந்நிலையில் இந்தியன் 2 படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த 1996ம் ஆண்டில் இந்தியன் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படம் 28 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசானது. படத்தை அப்போதே அனைத்து மொழி ரசிகர்களும் மிகப்பெரிய உற்சாகத்துடன் கண்டு களித்தனர். ஊழலுக்கு எதிராக சேனாபதி என்ற கேரக்டரை களம் இறக்கியிருந்தார் ஷங்கர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக சேனாபதி ஊழலுக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அவரது மகனே ஊழலை செய்து குழந்தைகள் இறப்பிற்கு காரணமான நிலையில் அவரையும் சேனாபதி விட்டு வைக்காத நிலை இந்த அந்த படத்தில் காணப்பட்டது.

முதல் பாகம் ஸ்காட்ச் விஸ்கி மாதிரி: இந்த படத்தின் கதைக்களம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவில் சிறப்பான விமர்சனங்களை பெற முடியாமல் தவித்து வருகிறது. இந்த படத்தில் சேனாபதியாக பல்வேறு கெட்டப்புகளில் கமல்ஹாசன் நடித்துள்ளார். நூறு வயதை கடந்த இளைஞராக அவர் இந்த படத்தில் மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில் முன்னதாகவே இயக்குனர் ஷங்கர் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து கணித்து பேட்டியொன்றில் பேசியிருந்தார். முதல் பாகம் என்பது ஸ்காட்ச் விஸ்கியை போன்றது என்றும் 12 ஆண்டுகளாக அது ரசிகர்கள் மனதில் ஊறியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Shankar Kamal haasan Indian 2 movie tamil cinema 2

புதிய கதைக்களம்: இதனால் இரண்டாவது பாகத்தில் என்னதான் ஃபிரெஷ்ஷான கதைக்களத்தை கொடுத்தால், முதல் பாகம் போல இல்லையே என்ற விமர்சனங்கள்தான் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது பாகத்தில் என்ன பெஸ்டாக கொடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டுதான் செயல்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பார்ட் ஒன்றை காட்டிலும் இரண்டாவது பாகத்தில் கூறப்படும் கருத்து மிகப்பெரியது என்றும் ஷங்கர் கூறியுள்ளார். அது பான் இந்தியனுக்கான கருத்து என்றும் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பார்ட் ஒன்றில் தமிழகத்தை சுற்றியே கதை நகரும் என்றும் ஆனால் இந்தியன் 2 படம் இந்தியாவை சுற்றி கதைக்களம் உள்ளதாகவும் ஷங்கர் மேலும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X