சிவாஜி ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த காரியம்.. புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்!

சென்னை: தர்பார் இசை வெளியீட்டு விழாவில் சிவாஜி படத்தின் போது நடிகர் ரஜினிகாந்துடன் ஏற்பட்ட சுவாரசிய அனுபவங்களை இயக்குநர் ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தர்பார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இதில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதுவரை ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய பிரமாண்ட படங்களை கொடுத்துள்ள இயக்குநர் ஷங்கரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சிவாஜி படப்பிடிப்பு

சிவாஜி படப்பிடிப்பு

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷங்கர் ரஜினிகாந்த் குறித்த பல்வேறு சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, சிவாஜி படப்பிடிப்பின் போது தண்டவாளத்தில் ஒரு காட்சி எடுக்கப்பட்டது. இதனால் அந்த தண்டவாள பகுதியில் நீண்ட நேரம் இருக்கவேண்டியதாயிற்று.

அங்கேயே சாப்பிட்டார்

அங்கேயே சாப்பிட்டார்

அந்த தண்டவாளத்தில் நாற்றம் வீசும். அங்கிருந்தவர்கள் அனைவரும் கேரவனுக்கு சாப்பிட சென்றுவிட்டார்கள். ஆனால் அங்கேயே இருந்து உணவைச் சாப்பிட்டார் ரஜினி.

நேரத்தின் அருமை

நேரத்தின் அருமை

ஏனென்றால் கேரவனுக்கு செல்ல 20 நிமிடங்களாகும். படப்பிடிப்பில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக கேரவனை தவிர்த்து தண்டவாளத்திலேயே அமர்ந்து சாப்பிட்டார். நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி.

நேரம் தவறாமை

நேரம் தவறாமை

படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார். நேரம் தவறாமை என்பது ரஜினியிடமிருந்து அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.

தினம் தினம் நினைப்பேன்..

தினம் தினம் நினைப்பேன்..

தயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று நினைத்து வேலை செய்பவர் ரஜினிகாந்த். நான் ரஜினியுடன் பணியாற்றி ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும் தினம் தினம் அவரை நினைத்துக்கொள்வேன் என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

அனிருத்துக்கு புகழாரம்

அனிருத்துக்கு புகழாரம்

அப்போது இந்தியன் 2 படம் குறித்து பேசிய இயக்குநர் ஷங்கர், இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவருடன் முதல் முறை கம்போசிங் அமைக்க அமர்ந்தேன், காட்சி வரும் நிகழ்வை கூறினேன். முதல் ட்யூன் போட்டார். அதுவே ஓகே ஆகிவிட்டது. அதேபோல் இரண்டாவது பாடலும் ஓகே. ஆனால் மூன்றாவது பாடலுக்கு ஐந்து ட்யூன் வரை சென்று விட்டது.அனைத்து தரப்பினருக்கும் பிடிக்க வேண்டும் என்று அனிருத் வேலை செய்கிறார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X