Director shankar: 'கேம் சேஞ்சர்' தயாரிப்பாளருக்கு பல கோடி செலவை இழுத்துவிட்ட ஷங்கர்!
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தின் பாடலுக்கு பல கோடி செலவு செய்து தயாரிப்பாளரை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார்.
தமிழில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய ஷங்கர், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார்.

வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ராம்சரணின் கேம் சேஞ்சர்: இப்படத்தில் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அரசியல் கதையம்சம் கொண்ட படமாக கேம் சேஞ்சர் திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கதையை தான் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.
பாடலுக்கு மட்டும் பலகோடி செலவு: இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.90 கோடியை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு பாடல் காட்சிகளையும் பிரம்மாண்டமானதாகவும் வியக்க வைக்கும் வகையில் படமாக்கியுள்ளாராம். இதற்காக ரூ. 90 கோடி செலவு ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடல் காட்சிக்காக கோடியில் செலவு செய்து தில் ராஜூவை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார்.
ரொம்ப டூமச்: ஷங்கரின் படம் என்றாலே பிரம்மாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இருந்த போதும், பாடலுக்கு மட்டும் ரூ.90 கோடி என்பது ரொம்ப டூமச் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார். பிரபுதேவா மற்றும் ஜானி மாஸ்டர் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். ராம் சரணின் அசத்தலான நடனத்தில் பிரம்மாண்ட பாடலை திரையரங்கில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்


Click it and Unblock the Notifications











