Game Changer: 5 பாட்டு.. 91 கோடி.. தயாரிப்பாளருக்கு ஷங்கர் கொடுத்த அதிர்ச்சி!
சென்னை: பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்துள்ள இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார்.
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தையும் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தின் பாடல்களுக்காக 91 கோடி ரூபாய் செலவு: இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்தவர். இவரது இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன. ரஜினி, கமல், விஜய், ராம்சரண் என தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களை தொடர்ந்து இயக்கிவரும் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 2019-ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் சூட்டிங் தடைபட்டது.
இதனிடையே தெலுங்கில் ராம்சரணை லீட் கேரக்டராக வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு கடந்த ஆண்டில் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கியது. இந்தப் படத்தில் கமலின் சேனாபதி கேரக்டர் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்த கேரக்டருக்காக, மேக்கப்பிற்காக தினந்தோறும் 6 மணிநேரங்களை கமல்ஹாசன் செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் சூப்பர்ஹிட்டடித்த நிலையில், இரண்டாவது பாகமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2 என இரு படங்களின் சூட்டிங்கையும் ஒரே நேரத்தில் ஷங்கர் இயக்கி வருகிறார். இரண்டு படங்களின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தில் ராஜூ உள்ளிட்டவர்கள் தயாரிப்பில் உருவாகிவரும் கேம் சேஞ்சர் படமும் தெலுங்குப்பட உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தயுள்ளது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பின்னணி பாடல்கள் மற்றும் பிஜிஎம் சிறப்பாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்தப் பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாடல்களை சூட் செய்வதற்காக மொத்தம் 91 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பு தரப்பு திகைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் துவங்கப்பட்ட நிலையில், வரும் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஷெட்யூலை அடுத்து மீண்டும் அடுத்த ஷெட்யூலில் 40 நாட்கள் தொடர்ந்து சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் வரும் நவம்பர் மாதத்தில் நிறைவடைந்து அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதனால் படத் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











