மகளின் திருமண வரவேற்பை நிறுத்திய ஷங்கர்.. பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்த நிலையில் திடீர் முடிவு!
சென்னை : இயக்குநர் ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திடீரென நிறுத்தி உள்ளார்.
ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ஷங்கரின் இளைய மகள் அதிதி முத்தையா இயக்கி வரும் விருமன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருமணம்
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த ஜூன் 27ந் தேதி, மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட ரெசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

நெருங்கிய உறவினர்கள்
இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டனர். இதனால், சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என அப்போதே கூறப்பட்டது.

பிரபலங்களுக்கு அழைப்பிதழ்
இயக்குனர் ஷங்கர் மே 1 தனது மகளின் திருமண வரவேற்பு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார். மேலும் இதற்காக பிரம்மாண்டமாக செட் போடப்பட்டுள்ளது. மேலும்1500 பத்திரிகைகள் அடித்து திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம் தெரியவில்லை
ஆனால், இயக்குநர் ஷங்கர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திடீரென நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஷங்கர் 10 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார். இப்போது திருமண வரவேற்ப்பை நிறுத்தியதற்கான காரணம் என்ன என்பது வெளியாவில்லை.


Click it and Unblock the Notifications











