Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ஆர்சி 15 க்கு அஜித் பட டைட்டில் தான் வேணும்...தாறுமாறாக வந்து குவிந்த ஓட்டுக்கள்
ஐதராபாத் : டைரக்டர் ஷங்கர், ஆர்சி 15 என தற்காலிகமாக பெயரிடப்ட்ட ராம்சரணின் 15 வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜய்யின் வாரிசு படத்தை தயாரிக்கும் தில் ராஜு தான் தயாரித்து வருகிறார். தமன் இசையமைக்கிறார்.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் பேனரில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இந்த நிறுவனத்தின் 50வது தயாரிப்பாகும். இதனால் கிட்டத்தட்ட ரூ.170 கோடிகளை செலவு செய்து படத்தை எடுத்து வருகிறார்கள்.
இந்த படத்தில் ராம் சரணுடன், கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, அரவிந்த்சாமி, எஸ்.ஜே.சூர்யா, சுரேஷ் கோபி, இஷா குப்தா, ஸ்ரீகாந்த், சுனில், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சுப்ரமணியம் அஜித் குமார் ஆகிய நான்.. முதலமைச்சராகவே மாத்தி அலப்பறை பண்ணும் ரசிகர்கள்!

விறுவிறுப்பான ஆர்சி 15 ஷுட்டிங்
தெலுங்கில் எடுக்கப்பட்டு வரும் ஆர்சி 15 படம் ஐதராபாத், மகாராஷ்டிரா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் படமாக்கப்பட்டு வருகிறது. 2023 ம் ஆண்டு மகரசங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்தார். இந்த படத்தை தமிழ் மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இது ஷங்கர் கதை இல்லையா
இந்த படத்தின் மூலக்கதையை தான் எழுதியதாகவும், திரைக்கதையை தான் டைரக்டர் ஷங்கர் எழுதியதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் கூறி இருந்தார். இந்த படத்தில் ராம் சரண், அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அரசியல் கதைக்களம் கொண்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் அவதாரமெடுக்கும் ஷங்கர்
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ராம் சரணுடன் கோட் சூட் அணிந்து நடந்து வரும் கூட்டத்தில் டைரக்டர் ஷங்கரும் இடம்பெற்றிருந்தார். இதனால் ஷங்கரும் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஷங்கரின் நடிகர் அவதாரத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு பின் ஷங்கர்
இதற்கு முன் சிவாஜி, யந்திரன், நண்பன் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் ஷங்கர் நடித்துள்ளார். 2012 ம் ஆண்டு நண்பன் படத்தில் அஸ்கு லஸ்கு பாடலில் ஷங்கர் தோன்றி இருந்தார். அதற்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து ஆர்சி 15 படத்தில் ஷங்கர், கேமிரா முன் தலைகாட்ட போகிறார்.

என்ன டைட்டில் வைக்க போகிறார்
ஆர்சி 15 படத்தின் பெரும்பாலான சீன்களை எடுத்து முடித்து விட்டாராம் ஷங்கர். இதனால் தற்போது படத்தின் டைட்டிலை தேர்வு செய்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளாராம். ஆர்சி 15 படத்திற்காக அதிகாரி, சிட்டிசன், சர்காருடு, விஸ்வம்பரா ஆகிய டைட்டில்களை ஷங்கர் தேர்வு செய்து வைத்துள்ளாராம். இதில் எந்த டைட்டிலை தேர்வு செய்வது என்ற ஆலோசனை தான் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

அஜித் பட டைட்டில் தான் வேணும்
இதனால் டீமிடமே டைட்டிலை தேர்வு செய்யும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் ஷங்கர். டீமில் உள்ளவர்களை இந்த டைட்டில்களுக்கு ஓட்டளிக்கும்படி கேட்டுள்ளார். இதில் பெரும்பாலானவர்கள் சிட்டிசன் என்ற டைட்டில் தான் வேண்டும் என ஓட்டளித்துள்ளார்களாம். இதனால் டைட்டிலை முடிவு செய்யும் நிலைக்கு வந்து விட்டார்களாம். விரைவில் ஒரு பண்டிகை நாளில் டைட்டிலை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இந்த டைட்டிலை வைப்பாரா ஷங்கர்
2001 ம் ஆண்டு அஜித் நடித்து வெளிவந்த படம் சிட்டிசன். அஜித் வித்தியாசமான பல கெட்அப்களில் நடித்திருந்த இந்த படம் மிக பிரபலமான, செம ஹிட்டான படம். கிட்டத்தட்ட 9 கெட்அப்களில் அஜித் இந்த படத்தில் நடத்திருப்பார். ஒருவேளை ஷங்கர், ஆர்சி 15 படத்திற்கு சிட்டிசன் என்ற டைட்டிலை தேர்வு செய்தால், அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்யும். தமிழ் ரசிகர்கள மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களும் படத்தை அதிகம் எதிர்பார்க்க துவங்கி விடுவார்கள். ஷங்கர் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.