இயக்குநர் ஷங்கர் முதல் டிடி வரை.. ஓட்டுப் போட்ட பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை: காலை 7 மணி ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள், பொதுமக்களோடு பொதுமக்களாக நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
Recommended Video
சினிமா பிரபலங்கள் ஓட்டுப் போட்டு விரலில் உள்ள மை காட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் ஷங்கர், மோகன் ராஜா, பிரியா பவானி சங்கர், டிடி நீலகண்டன் என ஏகப்பட்ட பிரபலங்களும் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி உள்ளனர்.

மக்களிடையே ஆர்வம்
கொரோனா பரவல் அபாயம் இருந்த போதிலும், வாக்கு செலுத்த உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதால், பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் காலை முதலே மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 100 சதவீத வாக்கு பதிவாக வேண்டும் என ஏகப்பட்ட பிரபலங்கள் மக்களுக்கு அறிவுறுத்தி வாக்குச் சாவடிகளுக்கு வர தூண்டி வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கர்
ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், 2.0 என ஏகப்பட்ட சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கியுள்ள பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இன்று தனது வாக்கினை செலுத்தி உள்ளார். அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேட்சிங் மாஸ்க்
நடிகை பிரியா பவானி சங்கர் தனது காரில் சென்று வாக்கினை செலுத்தி உள்ளார். உடைக்கு மேட்சிங்காக மாஸ்க் அணிந்து கொண்டு பிரியா பவானி சங்கர் ஓட்டுப் போட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. கொரோனா பரவலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை மாஸ்க் அணிந்தபடியே ஓட்டுப் போட்டு செல்கின்றனர். எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் இதனை கடைபிடித்தால் நல்லது.

ஓட்டுப் போட்ட விஜய் ஆண்டனி
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது மனைவியுடன் சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். நடிகை ரித்விகா, விஷ்ணு விஷால், ஹரிஷ் கல்யாண், சினேகா, பிரசன்னா என ஏகப்பட்ட பிரபலங்களும் தங்களது ஓட்டுக்களை போட்டுள்ளனர்.

வாக்களித்த டிடி
விஜய் டிவி தொகுப்பாளினியான டிடி எனும் திவ்ய தர்ஷினியும் தனது வாக்கை செலுத்தி உள்ளார். தொடர்ந்து பிரபலங்கள் தாங்கள் ஓட்டுப் போட்ட பின்னர் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று மக்கள் ஒரே சிந்தனையில் இருப்பது எந்த வித மாற்றத்திற்கு வித்திட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











