கோலிவுட்டின் வெற்றிமகன் ஷங்கருக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள் #HBDDirectorShankar
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் ஷங்கருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளது.
நடிக்க ஆசைப்பட்டு இயக்குனரானவர் ஷங்கர். 1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அன்றில் இருந்து இன்று வரை தொடர்ந்து வெற்றிப் படங்களை அளித்து வருகிறார்.

25 ஆண்டுகளாக கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார் ஷங்கர். வெற்றி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதால் #HBDDirectorShankar என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.
ஷங்கர் ரஜினியை வைத்து இயக்கியுள்ள 2.0 படம் வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்குகிறார் ஷங்கர். இந்தியன் 2 படம் மீது தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நிச்சயம் அரசியல் விஷயங்கள் தூக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











