அருமையான நிகழ்வு… மறக்க முடியாது… முதல்வருக்கு நன்றி கூறிய இயக்குனர் ஷங்கர் !
சென்னை : இயக்குனர் ஷங்கர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தமிழக முதலமைச்சருக்கு ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நேற்று நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற இத்திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ரோஹித்
திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் மதுரை பேந்தர்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளர் தாமோதரனின் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டனுமான ரோஹித்துக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

நெருங்கிய உறவினர்கள் மட்டும்
இவர்களது திருமணம் மகாபலிபுரம், கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று காலை 11.15 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

மணமக்களை நேரில் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினார். அவருடன் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காஃபி குடித்த முதல்வர்
திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வரை சாப்பிட ஷங்கர் அழைத்த போதும், காஃபி மட்டும் போதும் என்று கூறியுள்ளார். இதனால், பில்டர் காஃபியை மட்டுமே ரசித்து ருசித்து பருகிவிட்டு அங்கிருந்த புறப்பட்டு இருக்கிறார் முகஸ்டாலின்.

மணமார்ந்த நன்றி
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர், தனது மகளில் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார். அவருடைய ஆசிர்வாதம் மணமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் அந்த அருமையான நிகழ்வை என்றும் தங்களால் மறக்க முடியாது என்றும் ஷங்கர் கூறியுள்ளார். மேலும், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











