twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் உருக்கம்!

    |

    சென்னை: அந்த கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என இந்தியன் 2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார்.

    Recommended Video

    Maanadu Kick Starts Shooting | Simbhu | Venkat Prabhu | Annathe | D. Imman

    கடந்த வாரம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் லைட்டுகள் கட்டப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்தது. இதில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ் திரைத்துறை மட்டுமின்றி இந்திய சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    விசாரணை

    இந்த விபத்தில் இருந்து இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினர் இந்த விபத்து தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு அண்மையில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
    இதுதொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

    கமல் கடிதம்

    கமல் கடிதம்

    விபத்துக்கு பிறகு இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்நிலையில் இனி படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என லைகா நிறுவனத்துக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதினார். படப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கு தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இன்னும் மீளவில்லை

    இன்னும் மீளவில்லை

    இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இயக்குநரான ஷங்கர், படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து உருக்கமாக டிவிட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பெரும் வலியோடு இதை எழுதுகிறேன். அந்த சம்பவத்தில் இருந்து நான் பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன், என்னுடைய உதவி இயக்குநரையும் குழுவினரையும் இழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

    நல்லா இருந்திருக்கும்

    நல்லா இருந்திருக்கும்

    கிரேன் விழுத்ததில் இருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறேன். அந்த கிரேன் என் மீது விழுந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். அந்த குடும்பங்களுக் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள் என உருக்கமாக தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்..

    பெரும் வலியுடன்

    பெரும் வலியுடன்

    விபத்துக் குறித்து இயக்குநர் ஷங்கர் இதுவரை வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. விபத்துக்கு காரணம் இயக்குநர் ஷங்கர்தான் என்கிற ரீதியில் பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் விபத்து நடந்து 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இயக்குநர் ஷங்கர் பெரும் வலியுடன் இப்படி ஒரு டிவிட்டை பதிவிட்டிருக்கிறார்.

    English summary
    Director Shankar tweets about Indian 2 set accident. He says I feel it would’ve been better if it was on me.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X