Shankar: அட்லீ செயலால் அப்செட்டான இயக்குநர் ஷங்கர்.. என்னது ரீ ஷுட்டுக்கு ப்ளான் செய்யறாரா!
சென்னை: நடிகர் ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் ஜவான். இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
நல்ல விமர்சனங்களோடு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக மாறியுள்ளது. இதன்மூலம் அட்லீக்கும் பாலிவுட்டில் சிறப்பான என்ட்ரி கிடைத்துள்ளது.
இயக்குநர் ஷங்கரின் நண்பன், எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள அட்லீ, ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக தமிழில் களமிறங்கினார்.

இந்தியன் 2 படத்தின் காட்சிகள் ஜவான் படத்தில் இடம்பெற்றதால் அப்செட்டான ஷங்கர்: நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியுள்ளார் அட்லீ. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இன்றைய தினம் சர்வதேச அளவில் ஜவான் படம் ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய ப்ரீ புக்கிங் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகளும் பல கோடிகளை அள்ளியுள்ளன. படம் தற்போது சர்வதேச அளவில் மிகச்சிறப்பான வரவேற்பு மற்றும் வசூலுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகின்றது.
இந்தப் படத்தின்மூலம் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தான் பாலிவுட்டில் மாஸ்தான் என்று நிரூபித்துள்ளார் அட்லீ. இருவேறு கெட்டப்புகளில் ஷாருக்கான் நடித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி, தீபிகா படுகோன் இவர்களுடன் சஞ்சய் தத்தும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின்மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை காட்டிலும் பிஜிஎம் சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இதுபோன்ற ஒரு வில்லனை தானே பார்த்ததில்லை என்றும் விஜய் சேதுபதி புதுமையான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளதாகவும் இயக்குநர் அட்லீ தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதேபோல தான் வெற்றிபெற காரணமான அனைவரும் இந்தப் படத்திலும் பணியாற்றியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தப் படத்தில் ஒரு எபிசோடில் விவசாயிகள் தற்கொலை மேட்டரை டீல் செய்துள்ளார் அட்லீ. இந்தக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக பெற்றுள்ளது. இதேபோல அவரது குருநாதர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் சூழலை பிரதானமான காட்சியாக அவர் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஜவான் படத்தில் அந்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்தியன் 2 டீம் அப்செட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள அந்தக் காட்சிகள் ரீ ஷுட் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஷங்கர் அட்லீ மீது மிகுந்த கடுப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக முழு முயற்சியுடன் ஜவான் படத்தை இயக்கி முடித்துள்ளார் அட்லீ. கொரோனா, ஷாருக்கானின் சொந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில் தற்போது படம் ரிலீசாகி முதல் நாளிலேயே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











