Shankar: அடுத்ததாக ரஜினியுடன் இணைய தயாராகும் ஷங்கர்.. ஆனா அதுக்கு அது வேணுமாம்!
சென்னை: இயக்குநர் ஷங்கர் -ராம்சரண் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் வரும் 10ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர், இந்த படத்தில் ராம்சரணுடன் ஜோடியாக நடித்துள்ளார் கியாரா அத்வானி.
தமன் இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பாடல்களுக்காக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டதாகவும் படத்தின் பாடல்களுக்காக மட்டுமே 75 கோடி ரூபாய் செலவழித்ததாகவும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கேம் சேஞ்சர் படம்: நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள கேம் சேஞ்சர் படம் வரும் 10ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பவன் கல்யாண் உற்சாகம்: படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய பவன் கல்யாண், ஷங்கர் படங்களை பிளாக்கில் டிக்கெட் வாங்கி சென்று பார்த்ததாக உற்சாகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஷங்கரும் இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் குறித்து அடுத்தடுத்த சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார். படத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் ராம்சரண் சிறப்பாக செய்து கொடுத்ததாக அவர் பேசியுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஜமௌலி குறித்தும் அவர் தனது பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்.
ரஜினியுடன் இணைய ஷங்கர் விருப்பம்: இந்நிலையில் இன்றைய தினம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஷங்கர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிறப்பான கதை அமைந்தால் நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து படம் இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ரஜினியுடன் இணைந்து எந்திரன், சிவாஜி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ஷங்கர் மீண்டும் ரஜினிகாந்துடன் இணைவது குறித்து பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டில் இந்தியன் 2 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த ஆண்டிலேயே அவரது கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 பங்கள் ரிலீசாகவுள்ளன.
தனியாக யோசிக்கவில்லை: இந்தியன் 3 படம் முன்னதாகவே உருவான நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் சில முக்கியமான விஷயங்களை அவர் இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஷங்கருக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கேம் சேஞ்சர் படம் மூலம் அவர் தெலுங்கில் இயக்குநராக என்ட்ரி கொடுத்துள்ளார். ஆயினும் தெலுங்கு ஆடியன்சிற்காக தனியாக யோசித்து இந்தப் படத்தை உருவாக்கவில்லை என்றும் முன்னதாக தன்னுடைய அனைத்து படங்களும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளதாகவும் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











