கமல் பிறந்தநாள்: ரஜினியை முந்திக்கொண்ட ஷங்கர்.. சத்தமில்லாமல் இந்தியன் 2 போட்டோபோட்டு அசத்திட்டாரே!

கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஷங்கர் வெளியிட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

Recommended Video

Indian 2 Shooting Spot:நடிகை காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்கிறார்

சென்னை: கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Director Shankar wishes Kamal with Indian 2 new photo

கடந்த சில தினங்களாக படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த கமல், தனது பிறந்தநாளையொட்டி தமிழகம் வந்துள்ளார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். கூடவே இந்தியன் 2 படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அந்த புகைப்படத்தில், ராணுவ சீருடையில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல் குவாலியர் கோட்டையில் இருந்தபடி நகரத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

கமலுக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் வகையில் ரஜினியின் தர்பார் திரைப்பட மோஷன போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாகவே ஷங்கர் இந்தியன் 2 போட்டோவை வெளியிட்டு அசத்திவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X