Director Shankar: அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீஸ்..டைரக்டர் ஷங்கரின் வேற லெவல் பிளான்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கிவந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கர் கமிட்டானார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் முடிக்கப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டது. தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தையும் இந்த ஆண்டிலேயே ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே ஷங்கர் -ராம்சரணின் கேம் சேஞ்சர் படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்தப் படத்தின் ரீலீசையொட்டிய பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

Director Shankars Indian 2, Indian 3 & Game changer movies going to release this year

இயக்குநர் ஷங்கர்: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த நிலையில், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை படக்குழுவினர் துரிதப்படுத்தியுள்ளனர். படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் 15 நாட்கள் கமல்ஹாசனின் சூட்டிங் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்குடன் சேர்த்தே இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் சில பேட்ச் வேலைகளையும் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியன் 2 படம்: இந்தியன் 2 படம் வரும் ஏப்ரல் 11 அல்லது 12ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையொட்டி தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தயாரிப்பு தரப்பு துரிதப்படுத்தி வருகிறது. இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் VFX மற்றும் டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் எடிட்டிங் வேலைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தப்படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபரில் ரிலீசாகும் கேம் சேஞ்சர்?: இந்த இரு படங்களும் இந்த ஆண்டிலேயே ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஷங்கர் -ராம்சரண் கூட்டணியில் உருவாகிவரும் கேம் சேஞ்சர் படமும் இந்த ஆண்டிலேயே அக்டோபர் மாதத்தையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஷங்கரின் படங்கள் ரிலீசாகாமல் ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கிய நிலையில், ஒரே ஆண்டில் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது அவர்களுக்கு இனிப்பான செய்தியாகவே அமைந்துள்ளது. இந்த மூன்று படங்களும் கமல், ராம்சரண் என முன்னணி நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியாகவுள்ளது கூடுதல் சிறப்பு.

ரசிகர்கள் உற்சாகம்: முன்னதாக இந்தியன் 2 படத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு ஷங்கர் செயல்பட்டுவந்த நிலையில், படத்தின் அடுத்த பாகத்தையும் தற்போது இணைத்தே திட்டமிட்டு சூட்டிங்கை முடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் கமல் சேனாபதி, சந்த்ரு என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அந்தப் படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் இந்தப் படங்களில் பிரம்மாண்டங்களுக்கு குறைவிருக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்தப் படங்களில் கமலின் சேனாபதி கேரக்டர் எத்தகைய தாக்கத்தை கொடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X