இந்தியன் 2வை தொடர்ந்து அதிரடியாக தயாராகும் இந்தியன் 3.. புது திட்டம் போடும் கமல்!
சென்னை: இயக்குனர் ஷங்கர் இந்தியன் மூன்றாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தியன் 2: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் ரசிகர்களை இது வெகுவாக கவர்ந்தது.
ஏகப்பட்ட பிரச்சனை: இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, லைகாவுடனான பிரச்சனை போன்றவற்றால் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
ரன்னிங் டைம்: ஏகப்பட்ட பிரச்சனைகளின் மத்தியில் இந்தியன் 2 படத்தை ஒரு வழியாக எடுத்து முடித்து ரிலீசுக்கு தயாராக வைத்திருக்கின்றனர். ஆனால் எடுக்கப்பட்ட மொத்த காட்சிகளை ஓட்டிப் பார்த்தால் ரன்னிங் டைம் 5.30 மணி நேரம் ஓடுகிறது. இதற்கு பல கோடிகளை கொட்டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்ததால் எந்த காட்சியை வெட்டுவது என தெரியாமல் படக்குழு திணறுகின்றனர்.
கமலின் சம்பளம்: இன்னும் 30 நிமிஷத்திற்கான படப்பிடிப்பு மட்டும் எடுத்தால் போதும் என்பதால், அதற்கான படப்பிடிப்பை தொடங்கும் வேலையில் படக்குழு இறங்கி உள்ளது. இந்தியன் 3 பாகத்திற்கு கமல் நடிக்க வேண்டிய காட்சிகள் எதுவும் இல்லாததால், சீன்களை எடுத்து சொருவி விடலாம் என சங்கர் நினைத்தார். ஆனால், கமலோ இந்தியன் பாகம் மூன்றில் நடித்தால், அதற்கும் தனியாக சம்பளம் வரும் என நினைத்துக்கொண்டு அந்த படத்திலும் கட்டாயம் தனக்கும் காட்சி வைத்தே ஆக வேண்டும் என சொல்லி. கமலுக்கு மட்டுமல்ல வேறு யாருக்குமே மூன்றாம் பாகத்திற்காக தயாரிப்பு நிறுவனம் சம்பளம் கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications











