Don't Miss!
- Finance
மார்ச் காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது..!
- Sports
சிஎஸ்கேவுக்கு எதிராக செய்யனுமா? முடியவே முடியாது..! கிறிஸ் கெயிலிடம் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ்
- News
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
- Automobiles
ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
- Technology
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திகேயனின் டான் ஸ்டேட்டஸ் என்ன...அப்டேட் தந்த டைரக்டர்
சென்னை : சிவகார்த்திகேயன் நடித்து நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் அயலான் படம் டிசம்பரில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய கோர்ட் இடைக்கால தடை விதித்து விட்டது.
2021ல் வெளியான மிகச்சிறந்த 4 த்ரில்லர் படங்கள்!
ஜனவரி 3 ம் தேதி வரை அயலான் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், புத்தாண்டிலேயே அயலான் படம் ரிலீசாக வாய்ப்புள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு
லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.

மழையிலும் டப்பிங்
டான் படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவு செய்யப்பட்டது. சென்னையில் செய்த அடாது மழையிலும் விடாமல் டப்பிங்கை பேசி முடித்தார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அப்டேட் தந்த டைரக்டர்
இந்நிலையில் இந்த படம் பற்றிய அடுத்த அப்டேட்டை டைரக்டர் சிபி சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். டப்பிங் ஸ்டூடியோவில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இருக்கும் ஃபோட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா டப்பிங் பணிகளை முடித்து விட்டார். அவருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி சொன்ன எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யாவும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில், டான் படத்தின் ஒவ்வொரு நாள் ஷுட்டிங்கையும் என்ஜாய் பண்ணினேன். டப்பிங்கும் அதே போல் தான். நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய பிரின்ஸ் சிவ கார்த்திகேயன், தயாரிப்பாளர் கலையரசு சார் ஆகியோருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி தந்த மாநாடு
எஸ்.ஜே.சூர்யா நடித்து இதற்கு முன் வெளிவந்த மாநாடு படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதில் ஹீரோ சிம்புவிற்கு இணையான ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டை பெற்று, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

விஷாலுக்கும் வில்லன்
இதனால் எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. டான் படத்தை தொடர்ந்து விஷால் 33 படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது.