Chiyaan 62 movie: சியான் 62 பட அறிவிப்பு வீடியோ தாமதத்திற்கு காரணம்.. தயாரிப்பாளர் விளக்கம்!
சென்னை: நடிகர் விக்ரமின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் சியானின் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இதனிடையே அடுத்த மாதத்தில் விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகவுள்ளது.

இதையடுத்து விக்ரமின் தங்கலான் படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் தன்னுடைய தேர்ந்தெடுத்த கதைக்களங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன், கோப்ரா படங்கள் வெளியான நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி விக்ரமிற்கு மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் அவரது கெட்டப் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுத்தது. இதையடுத்து கௌதம் மேனன், பா ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்துள்ளார்.
துருவ நட்சத்திரம் படம்: கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களில் கௌதம் மேனன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தில் ஸ்டைலிஷ்ஷான விக்ரமை பார்க்க முடிகிறது. படத்தில் அவருடன் ரிது வர்மா, கௌதம் மேனன், சிம்ரன், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தங்கலான் படம்: இந்தப் படங்களை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார் விக்ரம். சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். வித்தியாசமான அவரது இந்த கெட்டப்புகளின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில் படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி ரிலீசாகவுள்ளதாகவும் வரும் 1ம் தேதி படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான்62 படம்: கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தங்கலான் படத்தின் சூட்டிங்கை விக்ரம் நிறைவு செய்த நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனிடையே தற்போது சியான் 62 படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் சியான் 62 படத்தை இயக்கவுள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு வீடியோ: இதனிடையே இந்தப் படத்திற்கான அறிவிப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் கிராமத்து கெட்டப்பில் விக்ரம் காணப்படுகிறார். இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் விக்ரம் காணப்படும் நிலையில், அறிவிப்பு வீடியோவில் சிறிய சிறிய விஷயங்களிலும் டீடெய்லிங்கை இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கிளிம்ப்ஸ் வீடியோவை ஒரே வாரத்தில் அருண்குமார் திட்டமிட்டு உருவாக்கியதாக படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் பாராட்டியுள்ளார்.
வீடியோ தாமதத்திற்கு காரணம்: ஒவ்வொரு விஷயத்திலும் பர்பெக்டாக செயல்பட்டுவரும் அருண்குமார், இந்த கிளிம்ப்ஸ் வீடியோவை சிறப்பாக திட்டமிட்டு சூட்டிங்கையும் போஸ்ட் புரொடக்ஷனையும் ஒரே வாரத்தில் நடத்தி முடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் நேற்று முன்தினம் வெளியான இந்த அறிவிப்பு வீடியோ ஒரு மணிநேரம் தாமதமாக வெளியானது குறித்தும் ஷிபு தமீன்ஸ் காரணத்தை விளக்கியுள்ளார். புரொடக்ஷன் டீமால் மட்டுமே வீடியோ வெளியாக தாமதமானதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











