மீண்டும் ரஜினியின் படத்தை இயக்கும் சிறுத்தை சிவா?

சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளியையொட்டி வெளியாகியுள்ளது அண்ணாத்த.

இந்தப்படம் வசூல்ரீதியாக சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. 4 நாட்களில் 150 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ண உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபாவளித் திருநாளில் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ள போதிலும் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

ரூ.150 கோடி வசூல்

ரூ.150 கோடி வசூல்

கடந்த நான்கு நாட்களில் தீபாவளியையொட்டி விடுமுறை தினங்களாக அமைந்த நிலையில், படத்தின் வசூல் உலகளவில் 150 கோடி ரூபாயை தொட்டுள்ளது. உலகளவில் இந்தப் படம் 1000 திரையரங்குகளில் ரிலீசானது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படத்தை சிறப்பான வகையில் ப்ரமோட் செய்திருந்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினி படத்திற்கு எப்போதுமே விளம்பரம் என்பது தேவைப்படாது. சிறப்பான வகையில் ரசிகர்கள் ரஜினி படத்தை வரவேற்பார்கள். அந்த வகையில் இந்தப் படமும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்த சில படங்களில் மாறுபட்ட கேரக்டர்களை ஏற்று நடித்திருந்த ரஜினி, இந்தப் படத்தில் மீண்டும் கமர்ஷியல் அவதாரம் எடுத்துள்ளார்.

இயக்குநர் சிறுத்தை சிவா

இயக்குநர் சிறுத்தை சிவா

படத்தை இயக்கியுள்ள சிறுத்தை சிவா, ரஜினி ரசிகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்து, பக்கா கமர்ஷியல் படமாக, ரஜினி படமாக இந்தப் படத்தை கொடுத்துள்ளார். பஞ்ச் டயலாக்குகளுக்கும் படத்தில் பஞ்சம் இருக்கவில்லை. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.

மீண்டும் அண்ணாத்த கூட்டணி

மீண்டும் அண்ணாத்த கூட்டணி

இந்நிலையில் ரஜினி மற்றும் சிவா கூட்டணி மீண்டும் இணைந்து படம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த், ரஜினியை வைத்து படம் தயாரிக்கவுள்ளதாகவும் அவர், அந்தப் படத்திற்கு சிவாவின் பெயரை ரஜினியிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யாவுடன் படம்

சூர்யாவுடன் படம்

அண்ணாத்த படத்தையடுத்து தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்க சிவா, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்தப் படம் உறுதியானால், உடனடியாக சூட்டிங்கை துவக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் ரஜினியை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி

மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி

நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவர், மீண்டும் தனது வழக்கமான பாணியில் நடித்துள்ள படம் அண்ணாத்த. அந்த சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் சிவா. இந்நிலையில் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X