Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 5 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“ஆக்ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட்”.. ரஜினி 168 பற்றி முதன்முறையாக இயக்குநர் சிவா பேட்டி!
சென்னை: தனது இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் ஆக்சன் கலந்த குடும்பசென்டிமென்ட்கள் நிறைந்த படமாக ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் இருக்கும் என இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீசாக வெளி வர உள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
விஸ்வாசம் வெற்றிப்படத்தைக் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினி அடுத்ததாக நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. எந்திரன் மற்றும் பேட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார்.
அந்தரத்தில் மிதக்கும் பிரியா அட்லி... யோகா செய்யும் மாயம்

சிவா இயக்கத்தில் ரஜினி
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ரஜினி 168 எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவா இயக்கிய படங்களில் எல்லாம் பெரும்பாலும் குடும்ப செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். எனவே, ரஜினி 168ம் அப்படிப்பட்ட படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்டிமென்ட் தூக்கல்
இது தொடர்பாக சன் நியூசுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார் இயக்குநர் சிவா. அதில் அவர், "ரஜினி 168 படம் குடும்ப சென்டிமென்ட்கள் நிறைந்த கதைக்களமாக இருக்கும். எனக்கு அப்படியான படங்கள் எடுப்பது தான் மிகவும் பிடிக்கும். அதே சமயம் ஆக்சன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. நிச்சயம் இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

சக்சஸ் பார்முலா
சிவாவின் முந்தைய நான்கு படங்களிலும் அஜித் தான் நாயகனாக நடித்திருந்தார். அதில், வீரம், விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் கிராமத்து கதைக்களங்களைக் கொண்டிருந்தன. நகரத்து பின்னணியில் அவர் எடுத்த விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே, ரஜினி 168 படமும் கிராமியக் கதைக்களமாகத் தான் இருக்கும் எனத் தெரிகிறது.

எதிர்பார்ப்பு
அப்படி இருக்கும் பட்சத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் கிராமத்துப் படமாக இது அமையும். சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என பல்வேறு யூகங்கள் இப்போதே இணையத்தில் உலா வரத் தொடங்கி விட்டன.