கொரோனா இப்படி மிரட்டுதே 'அந்த' சீன்களை எப்படி எடுக்குறது.. பிரபல இயக்குநரின் கவலைய பாருங்க மக்களே!

சென்னை: கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வரும் நிலையில் சினிமாவில் அந்தக் காட்சியே எப்படி படமாக்குவது என கவலைப்பட்டுள்ளார் பிரபல இயக்குநர்.

Recommended Video

சாப்பாடு குடுங்க Actor Nakkul kind Advice | Lock down Diaries

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது. 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் கோரப்பிடியை சமாளிக்க முடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் அதிக இழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் பெரிய அண்ணனான அமெரிக்கா தான் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியா

இந்தியா

அந்த நாட்டில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் வெகு சில நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகளை ஆட்கொண்டிருக்கிறது கொரோனா. இந்தியாவில் மட்டும் 9000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா தொழிலாளர்கள்

சினிமா தொழிலாளர்கள்

300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸால் உலக பொருளாதாரமே முடங்கும் சூழலில் உள்ளது. சினிமாத்துறையும் முடங்கி கிடக்கிறது. இதனால் சினிமாவுக்கு பல்லாரயிக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தினக்கூலியை நம்பியுள்ள சினிமா தொழிலாளர்கள் பலரும் வறுமையில் சிக்கியுள்ளனர்.

இயக்குநருக்கு கவலை

இயக்குநருக்கு கவலை

பிரபலங்கள் பலரும் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி வருகின்றனர். முக்கிய பிரபலங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் பிரபல பாலிவுட் இயக்குநர் ஷுஜித் சிர்காருக்கு ஒரு முக்கியமான விஷயத்திற்காக பெரும் கவலை அடைந்துள்ளார்.

நெருக்கமான காட்சிகள்

அவர் இன்ஸ்டகிராம் பதிவிட்டிருப்பதாவது, இந்த கொரோனா பாதிப்பு எல்லாம் முடிந்த பிறகு திட்டமிட்டப்படி திரையுலகம் நெருக்கமான காதல் காட்சிகளை இனி எப்படிப் படமாக்கப் போகிறது என்பதைப் பார்க்கவேண்டும். முக்கியமாக முத்தம் மற்றும் கட்டியணைக்கும் காட்சிகள். எந்தளவுக்கு இந்தக் காட்சிகளை இனி படமாக்கப் போகிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காலம் பதில் சொல்லும்

காலம் பதில் சொல்லும்

இயக்குநரின் இந்த கேள்விக்கு நடிகை தியா மிர்சா இன்ஸ்டா பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார். படப்பிடிப்புகளில் எல்லாப் பணிகளுமே நெருக்கமாகத்தானே நடக்கும்! ஒவ்வொரு காட்சியையும் உருவாக்க அனைவருமே ஒன்றிணைந்துதான் பணியாற்ற வேண்டும். அதெல்லாம் எப்படி மாறும்? நம் குழு மொத்தமாக மாஸ்க் மற்றும் க்ளவுஸ் அணிந்து செயல்படுவோமா? காலம் தான் பதில் சொல்லும்.. இவ்வாறு பதில் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X