Siddique - இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: Siddique (சித்திக்) இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மலையாளத்தில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் சித்திக். 1986ஆம் ஆண்டு வெளியான பாப்பன் ப்ரியப்பேட்ட பாப்பன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து மலையாளத்தில் வெற்றிப்படங்களாக கொடுத்தார் சித்திக். அதன் காரணமாக அவரது இயக்கத்தில் நடிக்க கேரள தேசத்து ஆர்ட்டிஸ்ட்டுகள் ரொம்பவே விரும்பினர்.

Director Siddique Hospitalized after heart attack

தமிழில்: 1999ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரெண்ட்ஸ் என்ற படத்தை இயக்கினார். அதே படத்தை 2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி உள்ளிட்டோரை வைத்து அதே பெயரில் ரீமேக் செய்தார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. குறிப்பாக வடிவேலு ஏற்றிருந்த காண்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் இன்றுவரை ட்ரெண்டங்கில் இருக்கிறது. சமீபத்தில்கூட அது உலக அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

தமிழிலும் சூப்பர் ஹிட்ஸ்: தமிழில் ப்ரெண்ட்ஸ் படம் கொடுத்த ஹிட்டை அடுத்து கோலிவுட்டிலும் கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக மாறினார். குறிப்பாக சித்திக் படம் என்றால் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடையே பிறந்தது. அதேபோல் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது என்ற நிலையும் உருவானது. அதைத்தான் அவர் அடுத்ததாக தமிழில் இயக்கிய எங்கள் அண்ணா படமும் உணர்த்தியது. அதிலும் வடிவேலுவின் காமெடி இன்றுவரை வயிறு குலுங்க சிரிக்க வைப்பது.

விஜய்க்கு கம்பேக்: விஜய் அழகிய தமிழ்மகன், வில்லு, சுறா என வரிசையாக தோல்வி படங்களை கொடுத்திருந்தார். அந்த சமயத்தில் சித்திக் இயக்கத்தில் காவலன் படத்தில் நடித்தார். அது அவருக்கு கம்பேக்காக இருந்தது. குறிப்பாக பூங்காவில் தடுக்கி விழும் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்து விஜய்க்குள் இருக்கும் சிறந்த நடிகனை வெளிக்கொண்டு வந்திருந்தார் சித்திக். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவர் கடைசியாக தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும், மலையாளத்தில் பிக் பிரதர் படத்தையும் இயக்கினார். இரண்டு படங்களுமே போதிய வரவேற்பை பெறவில்லை.

மாரடைப்பு: இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எக்மோ கருவி துணையுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X