என்னையும் மகளையும் டார்ச்சர் செய்கிறார்..முன்னாள் மனைவி கொடுத்த புகார்.. நடிகர் பாலா கைது!

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரனான நடிகர் பாலாவின் மீது முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.பாலா மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், போலீசார் தரப்பில் அவரை இன்றைய தினம் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மலையாள நடிகரான பாலா,'அன்பு' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'அப்பா அம்மா செல்லம்' என்கிற படத்திலும், அஜித் நடித்த வீரம் படத்தில் அவரின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். இவர், 2019ம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிகளுக்கு அவந்திகா என்கிற மகள் இருக்கிறாள். இதையடுத்து, இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

actor bala siruthai siva arrest

இரண்டாவது திருமணம்: முதல் மனைவியை பரிந்த நடிகர் பாலா, 2021 ஆம் ஆண்டு இரண்டாவதாக எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோ வெளியான போதே இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியவந்தது. கடந்த ஆண்டு பாலாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த போது, எலிசபெத் தான் உடன் இருந்து பாலாவை கவனித்துக்கொண்டார்.

மகள் கண்ணீர் பேட்டி: இதையடுத்து கடந்த மாதம், நடிகர் பாலாவின் மகள் அவந்திகா, ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில்,என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாகவும் பல பேட்டிகளில் கூறி வருகிறார். ஆனால், இது உண்மை இல்லை, என்னையும் என்னுடைய குடும்பத்தையும் டார்ச்சர், குடித்துவிட்டு என் அம்மாவை அடித்தது கொடுமைப்படுத்தினார். அந்த வலியை நான் இப்போது உணர்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். இதனால், தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கீடாதீர்கள் என்று பேசி இருந்தார். மகளின் இந்த வீடியோ பார்த்த நடிகர் பாலா, கண்ணீருடன் பதில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

வழி மறித்து டார்ச்சர்: இந்நிலையில், நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா கடவாரா காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார். அதில், பாலா என்னையும், என்னுடைய மகளையும் வழிமறித்து துன்புறுத்துகிறார்.ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனையடுத்து கடவந்திரா காவல்துறையினர் நேற்று ஆஜராகுமாறு அழைத்து இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகாததால், எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டில் வந்த போலீசார் அவரை கைது செய்தனர். பாலா மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், போலீசார் தரப்பில் அவரை இன்றைய தினம் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X