Kanguva : 1500 ஆண்டுகளுக்கு முன் கதைக்களத்தை கொண்டது கங்குவா.. சிறுத்தை சிவாவின் அதிரடி பதில்!

சென்னை : நடிகர் சூர்யாவின் கங்குவா படம் குறித்து எழுந்த பல கேள்விகளுக்கு இயக்குநர் சிவா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

ஜெய்பீம் திரைப்படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்த பிறகு அவரின் மார்க்கெட் எங்கையோ சென்றுவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை அப்பட்டமாக தோலுறித்துக்காட்டிய இயக்குநர் ஞானவேல் ராஜாவை மக்கள் கொண்டாடினார்கள்.

Director siruthai siva shared about Suriyas kanguva movie interesting information

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பின் சூர்யாவின் படங்களை ரசிகர்கள் மட்டுமில்லாமல் மக்களும் ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா : ஜெய்பீம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அந்த ஹைப்பை இருமடங்காக்கி விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே வரும் அந்தக்கதாபாத்திரத்தின் மூலம் ரோலக்ஸ் என்ற புதிய ஒரு பரிமானத்தையே படைத்து விட்டார் சூர்யா.

இயக்குநர் சிறுத்தை சிவா : நடிகர் சூர்யாவின் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கங்குவா : சூர்யா 42 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பு வெளியானது இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. பல கங்குவாவிற்கு அர்த்தம் தெரிந்து கொள்ள கூசூளில் வலைவீசி தேடினார்கள். மேலும், ரஜினிகாந்த் நடித்த ஒரு இந்தி படத்தில் தலைப்பு இது என படத்தின் தலைப்பு குறித்து பல கருத்துக்கள் இணையத்தில் தீயாக பரவின.

பவர் ஆப் ஃபயர் : இதையடுத்து, படத்தின் இயக்குநர் கங்குவா என்பதன் அர்த்தத்தை விளக்கி உள்ளார். அதில், கங்குவா என்பது படத்தில் நாயகனின் பெயர் என்றும் கங்கு என்றால் ஃபயர் என்றும் கங்குவா என்றால் பவர் ஆப் ஃபயர் என்று அர்த்தம் என்றும், தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிக்கும் பொருத்தமான ஒரு பெயரை தேர்ந்து எடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

கற்பனை கதை இல்லை : மேலும் இப்படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களம் கொண்ட படமாகும். இப்படம் வெறும் கற்பனை கதை இல்லை, வலிமையான வரலாற்று ஆதாரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. எனது கனவு திரைப்படமான இப்படத்தின் மூலம் புதிய ஒரு உலகத்தையே நீங்கள் பார்ப்பீர்கள். அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளதால், 3டியில் கண்டுகளிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இசை தேவி ஸ்ரீபிரசாத் : பெரும் பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான saregama south கைப்பற்றி உள்ளது. 3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X