கங்குவா அட்டர் பிளாப்.. அப்போதே கணித்த பிரபல ஜோசியர்.. விழி பிதுங்கிய சிறுத்தை சிவா
சென்னை: வி என்ற பெயரை வைத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அடுத்ததாக வரலாற்று படம் ஒன்றை இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபலமான நடிகரும், இந்தி பட நடிகையும் நடித்திருந்தனர். ஆனால், இப்பட்ம கலவையான விமர்சனம் பெற்று பெரும் தோல்வியை சந்தித்தது. இப்படத்திற்கு பிறகு இயக்குநர் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த வரலாற்று படம் தோல்விக்கு பிரபல ஜோசியரை சந்தித்திருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சிவா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது பெயருக்கு முன்பு சிறுத்தை என்ற அடைமொழியும் சேர்ந்துகொண்டது. இப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளமாகவும் மாறியது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து வி என்ற பெயரில் வீரம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் அஜித் ரசிகர்களை தாண்டி குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்தை குடும்பம் குடும்பமாக பண்டிகை நாட்களில் வந்து பார்த்து சென்றது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காகவும் மாறியது. அஜித்திற்கும் சிறுத்தை சிவாவின் பணிவு மிகவும் பிடித்திருந்தது. இதனால், அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பை அளித்தார்.

சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் வெளியான 4 படங்களில் விவேகம் மட்டுமே தோல்வி படமாக இருந்தது. விஸ்வாசம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இயக்குநர் சிவா ரஜினியை வைத்து அண்ணாத்தே படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்றது, சினிமா விமர்சகர்களும் இதனை குடும்ப சீரியல் படம் என்றும் விமர்சித்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் அண்ணாத்தே படத்தை மிகவும் பிடித்த படம் என தெரிவித்திருந்தார். ரஜினி குட் புக்கில் சிவா இடம்பிடித்தார். ரஜினி படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவா ஒரு வரலாற்று படத்தின் கதையை சூர்யாவிடம் கூறி ஓகே செய்திருந்தார். இப்படத்தின் கதையும் சூர்யாவிற்கு பிடித்து போனது. இப்படம் தான் கங்குவா.
கங்குவா தோல்வி: கங்குவா படத்திற்காக சூர்யா உடலை வறுத்தி நடித்திருந்தார். 2 வருடமாக எடுக்கப்பட்ட இப்படம் கடந்தாண்டு பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கில் வெளியானது. படம் வெளியான முதல் வாரமே வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்தது. கதையில் சுவாரஸ்யம் இல்லை என்றும் படத்தில் கத்திக்கொண்டே இருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்தனர். மேலும், தெலுங்கு மகதீரா போன்று பேசப்படக்கூடிய கதையை சிவா சொதப்பவிட்டார் என்றும் தெரிவித்தனர். இதுவரை இல்லாத அளவிற்கு கங்குவா திரைப்படம் மிக கடுமையான சொற்களால் விமர்சனத்தை சந்தித்தது. மோசமான முறையிலும் இப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தது இயக்குநர் சிவாவிற்கு மன வருத்தத்தை அளித்தது.

ராசி இல்லை: கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு வெற்றிக்காக காத்திருக்கும் சிறுத்தை சிவா அடுத்த படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்நிலையில், கங்குவா படம் தோல்விக்கு ஜாதகம் சரியில்லாததும், அவரது அலுவலகம் ராசி இல்லாமல் போனது தான் காரணம் என பிரபல ஜோசியர் தெரிவித்திருக்கிறாராம். இதனை நம்பிய சிறுத்தை சிவா தற்போது தனது அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி இருக்கிறாராம். அடுத்த படத்திற்கு தயாரிப்பாளரும் ரெடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் ஜாதகம், ராசி பார்ப்பது தெரிந்த ஒன்று தான். ஆனால், கங்குவா தோல்விக்கு இப்படி ஒரு காரணத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என நெட்டிசன்கள் சிரித்த எமோஜியை பதிவிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











