Director Siva: கங்குவா படத்தால் கிடைத்த கவனம்.. பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் சிறுத்தை சிவா!
சென்னை: ரஜினி, அஜித், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் கோலிவுட்டில் பயணம் செய்துள்ளவர் சிறுத்தை சிவா. தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தறபோது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கங்குவா என்றால் நெருப்பின் மகன் என்று அர்த்தம் என்று முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசரும் இதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது.
ஆக்ஷன் பேன்டசி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பிரபல பாலிவுட் நாயகன் பாபி தியோல் மிரட்டியுள்ளார். அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி அதிரடி காட்டின. படத்தில் இவர்களுடன் யோகிபாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராவேந்திரா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று கூறப்பட்டுள்ளது. படம் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

கங்குவா படம்: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக ரஜினி, கார்த்தி, அஜித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து கமர்ஷியல் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் சிவா, இந்தப் படத்தில் வரலாற்று கதைககளத்தை கையில் எடுத்துள்ளார். அதிகமான பட்ஜெட்டுடன் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது கங்குவா படம். இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் சூர்யா மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
10 மொழிகளில் ரிலீஸ்: இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர். அதனால்தான் படத்தின் ரிலீஸ் தாமதமாவதாக முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தை ரசிகர்கள் அதிகமாக விரும்பும்வகையில் உருவாக்க தயாரிப்பு தரப்பு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் படத்தில் எந்தவிதமான சமரசமும் செய்துக் கொள்ளாமல் படத்தை இயக்கியுள்ளார் சிவா. இதுவும் படத்தின் ரிலீசுக்கு காரணமாக அமைந்துள்ளது.
சிவா மகிழ்ச்சி: இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து சமீபத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் இயக்குநர் சிவா. படத்தில் சூர்யா பல தோற்றங்களில் வருவார் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கங்குவா படத்தின்மூலம் சிறப்பான கவனத்தை சர்வதேச அளவில் அவர் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய அடுத்த படத்தில் பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் தனது அடுத்தப்படத்திற்கான கதையை கூறி ஓகே வாங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் அல்லது வருண் தவான் ஹீரோவாக நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டில் என்ட்ரியாகும் சிவா?: கங்குவா படத்தை முடித்த கையோடு சிவா இந்தப் படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு கங்குவா படம் உள்ளாகியுள்ள நிலையில், படம் ரிலீசானவுடன் சிவாவின் வேல்யூ இந்திய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மிகுந்த கொண்டாட்டத்திற்கு உள்ளாகும் இயக்குநராக மாறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் பாலிவுட் படத்தில் கமிட்டானால், அஜித் படம் தள்ளிப்போகும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











