Director Siva: நான் படிக்கும்போதே அஜித்துக்கு கட்டம் கட்டினேன்.. இயக்குநர் சிவா பகிர்ந்த சீக்ரெட்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் சிவா. இந்த படம் வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 14ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் அடுத்தடுத்து சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சிவா நடிகர் அஜித் எவ்வாறு தனக்கு பிரண்ட் மற்றும் கைடாக மாறி உள்ளார் என்பது குறித்து பகிர்ந்துக் கொண்டார். மேலும் தான் படிக்கும் காலத்திலேயே அஜித்தை வைத்து படம் இயக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சிவா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் 10ற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது/ இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி முடித்துள்ளார்/ இந்த படத்திற்கு முன்னதாக கமர்சியல் படங்களை இயக்கியிருந்த சிவா, தற்போது மிகவும் பிரம்மாண்டமாக வரலாற்று பின்னணியில் கங்குவா படத்தை இயக்கிய முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரமோஷன்களில் இயக்குனர் சிவாவும் பங்கேற்று வருகிறார்.
கங்குவா படம்: சூர்யா குறித்தும் கங்குவா படம் குறித்தும் ஞானவேல் ராஜா குறித்தும் குறிப்பாக நடிகர் அஜித் குறித்தும் பல விஷயங்களை சிவா பகிர்ந்து வருகிறார். அஜித்துடன் இணைந்து விசுவாசம், வீரம் உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கி முடித்துள்ளார் சிவா. இந்த படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் சமீபத்தில் அஜித் தன்னிடம் கூறியதாக ஒரு விஷயத்தை சூர்யாவும் பகிர்ந்திருந்தார். தான் இயக்குநர் சிவாவை ஏன் விடாமல் இருக்கிறேன் என்பது குறித்து தற்போது தெரிந்ததா என்று அஜித் சூர்யாவிடம் கேட்டதாக அவர் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்திருந்தார்.
அஜித்தை பாராட்டிய சிவா: இந்நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் சிவா, நடிகர் அஜித் குறித்தும் அவர் எப்படி தனக்கு பிரண்ட் மற்றும் கைடாக உள்ளார் என்பது குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் முன்னதாக அவர் இந்த படத்திற்காக கொடுத்த பேட்டியில் தான் ஒளிப்பதிவிற்காக படித்த போதிலேயே நடிகர் அஜித்தை வைத்து தான் படம் இயக்குவேன் என்று தன்னுடைய நண்பரும் பிரபல கேமரா மேனுமான வெற்றிடம் கூறியதாகவும் அது அப்படியே நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அஜித் -சிவா -வெற்றி கூட்டணி: தன்னுடைய படங்களுக்கு வெற்றி தான் கேமராமேனாக தொடர்ந்து இருப்பதாகவும் மற்ற படங்களில் கமிட்டாகி இருந்தாலும் அவர் தனக்காக தன்னை ஃப்ரீ செய்து கொள்வார் என்றும் சிவா மேலும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் குறித்து அவர் அடுத்தடுத்த பேட்டிகளில் தொடர்ந்து தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்து வருகிறார். தான் படிக்கும் காலத்திலேயே அஜித்தை இயக்க முடிவெடுத்ததாகவும் அது கடவுள் துணையால் அப்படியே நடந்ததாகவும் சிவா மேலும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











