சூர்யா 42 படத்தில் 6 லுக்கில் சூர்யா.. அப்டேட் சொன்ன டைரக்டர் சிவா!

சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படத்தின் சூட்டிங் சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னை இவிபி பிலிம் சிட்டியில் இன்னும் இரு தினங்களில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் படத்தில் சூர்யாவின் கெட்டப் குறித்து இயக்குநர் சிவா தனது சமீபத்திய பேட்டியில் அப்டேட் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்தப் படங்கள் மிகவும் திட்டமிடலுடன் எடுக்கப்பட்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்களின் வரிசையில் அடுத்ததாக சூர்யா 42 படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

விரைவில் சென்னையில் சூட்டிங்

விரைவில் சென்னையில் சூட்டிங்

படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில், சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டது. கோவாவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. இந்நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னை இவிபி பிலிம் சிட்டியில் வரும் மார்ச் 3ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்று பின்னணியில் சூர்யா 42

வரலாற்று பின்னணியில் சூர்யா 42

கமர்ஷியல் படங்களாக எடுத்து அவற்றை வெற்றிப் படங்களாக்கி வந்தவர் இயக்குநர் சிவா. இவர் தற்போது வரலாற்றுப் பின்னணியில் சூர்யா 42 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த மோஷன் போஸ்டரில் மிரட்டலான சூர்யாவை பார்க்க முடிந்தது.

5-6 கெட்டப்புகளில் சூர்யா

5-6 கெட்டப்புகளில் சூர்யா

இந்நிலையில் படத்தில் சூர்யாவை 5 முதல் 6 கெட்டப்புகளில் பார்க்கலாம் என்று இயக்குநர் சிவா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் 500 கோடிகளை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விரைவில் படத்தின் டைட்டில் உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 களைகட்டிய ப்ரீ ரிலீஸ் விற்பனை

களைகட்டிய ப்ரீ ரிலீஸ் விற்பனை

இந்தப் படத்தின் டிஜிட்டல், இசை உள்ளிட்ட ரைட்ஸ் தற்போது 500 கோடி ரூபாய்களுக்கு விற்பனை ஆகியுள்ளதாம். முன்னதாக விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் 400 கோடிகள் என கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த வசூலை சூர்யா 42 படம் முறியடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரு நாயகிகள்

இரு நாயகிகள்

படத்தில் மிருணாள் தாக்கூர் மற்றும் திஷா பட்டானி என இரு நாயகிகள் கமிட்டாகி நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்குமே தமிழில் இது அறிமுகப்படமாக அமைந்துள்ளது. இதனிடையே எந்தவிதமான அப்டேட்டும் கொடுக்காமல் சைலண்டாக படத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் சிவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X