கட்டிப்புடிச்சி.. கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாரு தலைவர்.. அண்ணாத்த அனுபவத்தை பகிர்ந்த சிவா!

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நாளை அண்ணாத்த தீபாவளி காத்துக் கொண்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த பட புரமோஷனை வெகு ஜோராக சன் பிக்சர்ஸ் செய்து வருகிறது.

இயக்குநர் சிறுத்தை சிவா அண்ணாத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வீடியோ தற்போது வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தலைவர் தீபாவளி

தலைவர் தீபாவளி

70 வயதிலும் மாஸ் ஹீரோவாக இளமை துள்ள நடிக்க முடியும் என்பதை திரையில் நிரூபித்துக் காட்டி ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டமாக ரிலீசாகிறது. இந்த தீபாவளி தலைவர் தீபாவளி தான் என ரஜினிகாந்த் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஏ ஃபார் அண்ணாத்த

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளனர். அண்ணாத்த நாளை ரிலீசாக உள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு A for அண்ணாத்த பாடல் வெளியாகிறது.

தீயாக நடக்கும் புரமோஷன்

தீயாக நடக்கும் புரமோஷன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. ஆனால், ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் ஒட்டுமொத்த கவனத்தையும் அண்ணாத்த படம் மீது செலுத்தி உள்ளது. தொடர்ந்து அண்ணாத்த பட புரமோ வீடியோக்களை போட்டு ரசிகர்களை தியேட்டர்கள் நோக்கி நகர வைத்து வருகிறது.

ஹவுஸ்ஃபுல்லான தியேட்டர்கள்

ஹவுஸ்ஃபுல்லான தியேட்டர்கள்

இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் அதிக ஸ்க்ரீன்களில் நாளை திரையிடப்படுகிறது. டிக்கெட் புக்கிங் ஹவுஸ்ஃபுல்லாக அனைத்து திரையரங்குகளிலும் மாறி வருகிறது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் அண்ணாத்த திரைப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எகிறி உள்ளது.

சந்தோஷத்தில் சிவா

இந்நிலையில், அடுத்த புரமோஷன் வீடியோவாக அண்ணாத்த பட இயக்குநர் சிறுத்தை சிவா பேசும் வீடியோவை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அண்ணாத்த படத்தை இவ்வளவு பெரிய படமாக கொண்டு வந்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு நன்றியை தெரிவித்த சிவா அண்ணாத்த பட அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

3 தீம் மியூசிக்

3 தீம் மியூசிக்

அண்ணாத்த படத்தில் ஒன்றல்ல மூன்று தீம் மியூசிக்கை இசையமைப்பாளர் இமான் போட்டுள்ளார். ஒவ்வொன்றும் வேறு வேறு விதமாக இருக்கும். ஆனால், அந்த மூன்றுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்றால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என இமான் செய்துள்ள மேஜிக்கை பாராட்டி உள்ளார் சிறுத்தை சிவா.

தலைவர் முத்தம் கொடுத்தார்

தலைவர் முத்தம் கொடுத்தார்

அண்ணாத்த படத்தை பார்த்து முடித்த தலைவர் அப்படியே கிட்ட வந்து என்னை கட்டிப்புடிச்சி கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. ஒரு இயக்குநரா எனக்கு இது போதும் என இயக்குநர் சிறுத்தை சிவா பேசும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X