Suriya: கங்குவா மாதிரியே 5 -6 கதைகள் சிவா கைவசம் இருக்காம்.. பூமி தாங்காது.. ரசிகர்கள் ஓபன்!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் ரிலீசாகியுள்ள நிலையில் படம் மிக சொதப்பலாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வரலாற்று ஜானலில் ஏராளமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படம் முன்னதாக வெளியான பாகுபலி உள்ளிட்ட படங்களின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. சூர்யா எப்படி இப்படி ஒரு கதையை, கதைக்களத்தை தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியையும் உருவாக்கியுள்ளது.

suriya kanguva movie siva

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா காம்பினேஷனில் உருவாகி நேற்றையதினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது கங்குவா படம். சூர்யா இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இந்த படத்திற்காக கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாகி இரண்டரை ஆண்டுகள் ஆகின்ற நிலையில் அந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் கங்குவா படம்தான் ரிலீசாகியுள்ளது. இந்த படம் ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு ஏற்ப சூர்யா, இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் படக்குழுவினர் இந்த படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை பதிவு செய்து வந்தனர்.

கங்குவா படம்: அடுத்தடுத்த பிரமோஷன்களுக்காக பேட்டிகளையும் கொடுத்து வந்தனர். சென்னையில் மட்டுமில்லாமல் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி என அடுத்தடுத்து அவர்கள் பிரமோஷன்களில் ஈடுபட்ட நிலையில் செல்லும் இடமெல்லாம் சூர்யாவிற்கு ரசிகர்கள் மிகச் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தனர். அவர் பான் இந்தியா ஸ்டார் என்பதை இந்த பிரமோஷன்கள் மூலம் நிரூபித்து இருந்தார். ஆனால் கங்குவா படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. இந்த படத்தின் கதை புரியவில்லை என்றும் படத்தில் கதையே இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் சிவா பேட்டி: நேற்றைய தினம் இந்த படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 22 கோடிகளை மட்டுமே வசூலித்து உள்ளது. முன்னதாக இந்த படத்தின் பேட்டிக்காக பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் 2000 கோடிகளை வசூலிக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படம் 200 கோடிகளையாவது வசூலிக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் கங்குவா படம் குறித்து அதன் தயாரிப்பாளரை போல அதிகமாக பேசாமல் தேவையான விஷயங்களை மட்டுமே பேசிவந்தார் இயக்குநர் சிவா. முன்னதாக சூர்யா குறித்தும் கங்குவா படத்தின் சுவாரசியங்கள் குறித்தும் மட்டும் பேசியிருந்தார்.

ரசிகர்கள் கேள்வி: அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட தன்னுடைய முந்தைய படங்களின் ஹீரோக்கள் குறித்தும், சிவா பேசியிருந்த நிலையில் கங்குவா படத்தைப் போலவே ஐந்து -ஆறு ஸ்கிரிப்டுகளை வித்தியாசமான ஜானர்களில் வரலாற்றுப் பின்னணியில் தான் உருவாக்கியுள்ளதாகவும் ஒவ்வொரு படமாக அடுத்தடுத்து உருவாக்க விருப்பத்துடன் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கங்குவா படம் மிகப்பெரிய ட்ரோல்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட கதையை எப்படி சிந்தித்து இருப்பார் சிவா என்று கேள்வியையும் ரசிகர்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அவர் அடுத்தடுத்து ஐந்தாறு படங்களை இதே ஜானர்களில் வைத்துள்ளதாக கூறியுள்ள பேட்டியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கங்குவா இரண்டாவது பாகம்?: ஒரு படத்திற்கே மண்டையை பிய்த்துக் கொள்ளும் நிலையில் எப்படி அடுத்தடுத்து ஐந்தாறு படங்களை பார்க்க தயாராக முடியும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கங்குவா படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குவா படத்தின் இறுதியில் கார்த்தி வில்லனாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த பாகம் உருவாகுமா என்றும் அதில் கார்த்தி வில்லனாக இணைவாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X