அஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்!
Recommended Video
சென்னை: நடிகர் அஜித்தின் வாழ்க்கை குறித்த படத்தை எடுக்க வாய்ப்பு கிடைத்தால் இந்த பெயர்தான் வைப்பேன் என இயக்குநர் சிவா ஒரு பெயரை முடிவு செய்துள்ளார்.
நடிகர் அஜித் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது விடா முயற்சியாலும் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னுக்கு வந்தவர். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.
அஜித்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ரசிகப் பெருமக்கள் உள்ளனர். அஜித் ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவரது ரசிகர்கள் அதனை வேத மந்திரமாக ஏற்று பின்பற்றுவார்கள்.

மனிதநேயம் மிக்கவர்
சினிமாத்துறையிலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் குறிப்பறிந்து செயல்படுவார் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் அஜித். அஜித்துடன் பணிபுரியும் கடைக்கோடி டெக்னிஷியன்கள் கூட அஜித்தை மனித நேயம் மிக்க மனிதர் என்றே புகழ்ந்து வருகின்றனர்.

வாய்ப்பு கிடைத்தால்
இந்நிலையில் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய நான்கு படங்களை இயக்கிய இயக்குநர் சிவா பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியுள்ளார். அப்போது அஜித்தின் வாழ்கையை படமாக எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அதற்கு இந்த பெயர்தான் வைப்பேன் என தான் செலக்ட் செய்துள்ள பெயரை தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ்
இயக்குநர் சிவா அடுத்ததாக ரஜினியின் 168வது படத்தை இயக்கவுள்ளார். ரஜினியின் 168வது படத்தை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தயாரான சிவா
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்நிலையில் அஜித்தின் வாழ்க்கை குறித்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் இயக்குநர் சிவா.

என்ன பெயர்?
அஜித்தின் வாழ்க்கையை படமாக எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு தன்னம்பிக்கை என்று பெயர் வைப்பேன் என தெரிவித்திருக்கிறார். நடிகர் அஜித் சினிமா வாடையே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, தனிமனிதனாக தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து உழைத்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு தலயாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications